மகள் குறித்து விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு!

மகள் குறித்து விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு!
Published on

றைந்த தனது மகளை எண்ணி விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மீரா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இதன் காரணமாக விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மீரா வெளியிட்டிருக்கும் பதிவு, மீரா தங்கம். உனது பியானோ உனது விரல்களுக்காக காத்திருக்கிறது. நீ சீக்கிரம் போய் விட்டாய். அதை எங்கள் யாராலும் நம்ப முடியவில்லை. இந்த உலகம் உனக்கானது இல்லை போல. ஆனால் உன் அம்மா இங்கு தான் இருக்கிறேன்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான கருத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ரொம்ப வலிக்கிறது. இந்த நிலையில் இருந்து என்னை வெளிக்கொண்டு வர கடவுள் உதவுவார் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.

இந்த துக்கத்திலிருந்து நான் வெளிவர இன்னும் சிறிது காலம் ஆகும் என்றும், மேலும் உன்னை சந்திக்க நான் வரும் வரை நீ நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com