விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

ROMEO
ROMEO

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு புத்துயிர் பெற்ற ஓடிடிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போது 90 சதவீதம் பேர் வீட்டில் ஓடிடி சந்தா வைத்திருக்கும் கலாசாரம் வந்துவிட்டது. அப்படி ஓடிடி அனைவரிடமும் பரவியுள்ளது. இதனால் தியேட்டர்களில் பெரிதளவு படங்கள் ஓடுவதில்லை. விஜய், அஜித் போன்ற நடிகர்களின் பெரிய படங்கள் மட்டுமே ஓடுகின்றன. சமீப காலமாகவே பழைய படங்கள் ரீ ரிலீஸ் கலாசாரம் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான விஜய்யின் ‘கில்லி’ படம் மாஸாக வரவேற்பைப் பெற்றது. மேலும், மலையாள படமான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கும் அதிக வரவேற்பு பெற்றது. இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ் படங்களும் சிலது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் விஜய் ஆண்டனி. அதன் பின் நடிப்பின் பக்கம் வந்த அவர், 2012ம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் சலீம், பிச்சைக்காரன், சைத்தான் என அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள படம்தான் ரோமியோ. இந்த இயக்குநர் இயக்கத்தில் ஏற்கெனவே, ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற பிரபலமான வெப் சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் கணவர்களை போலவே, ‘ரோமியோ’ படமும் இருக்கிறது. மற்ற படங்களில் கலெக்டர் ஆகணும், டீச்சர் ஆகணும் என மனைவிகள் கனவு காணுவார்கள். இந்தப் படத்தில், தமிழ் நாட்டில் இன்னும் பல பெண்கள் வரத் தயங்கும் சினிமா துறையில் கதாநாயகி ஆக வேண்டும் என விரும்புகிறார் மனைவி.

இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படம் ஓடிடி தளத்தில் வரும் மே 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com