பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் இவர்கள் தான்.!

ps vijay anushka
ps vijay anushka

பிரம்மாண்ட படைப்பாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் இதற்கு முன்னதாக நடிகர் விஜய் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரமாண்டமான படைப்பு. இந்த படைப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. எழுத்து வடிவத்திலேயே அனைத்து கதாபாத்திரங்களையும் நம் ஆழ் மனதுக்குள் பதியவைத்துவிட்டார். இதனால் பொன்னியின் செல்வன் நாவலுக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட நாவல் படமாக்கப்பட வேண்டும் என பல இயக்குனர்கள் எண்ணியதுண்டு. பலர் முயற்சி செய்தும் தோற்றதும் உண்டு. இறுதியாக மணிரத்னம் இந்த நாவலை கையில் எடுத்தார். படமாக்க வேண்டும் என எண்ணியதென்னவோ எளிது தான். ஆனால் முழு படமாக்க பல பிரச்சனைகள் வந்தது. முதலில் ரஜினி, கமல் என பல நடிகர்களை தேர்வு செய்து இந்த படம் ட்ராப் ஆகி வந்தது. பல நடிகர்களுக்கு இன்னும் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என ஆசை உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஒரு மேடையில் இதை பற்றி கூறியிருப்பார். இந்த நிலையில் ஒருவழியாக மணிரத்னம் இந்த படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்திருந்தனர்.

முதல் பாகம் வெற்றி பெற்ற அளவிற்கு 2ஆம் பாகம் வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்த படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே தேர்வான நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகியுள்ளது. அதில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யும், பொன்னியின் செல்வனாக மகேஷ் பாபு மற்றும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்க இருந்தார். மேலும் நந்தினியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் அடடே விஜய் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com