குஷி திரை விமர்சனம்!      

Kushi movie
Kushi movie

விஞ்ஞானமா? மெய்ஞானமா? என்று நமக்குள் நாம் பல கேள்விகள் கேட்டுக்கொள்வோம். இந்த கேள்வியை வைத்து  காதல் பின்னணியில் குஷீ  படத்தை  தந்துள்ளார் சிவ நிர்வானா.சமந்தா, விஜய் தேவரகொண்டா காதலர்களாக நடித்துள்ளார்கள்.               

கடவுளை நம்பாத விஞ்ஞானி லெனின் சத்யா (சச்சின் கேக் டேகர் ) இவரது மகன் விப்லவ். (விஜய் தேவரகொண்டா ) ஆன்மிக சொற்பொழிவு, ஜோதிடம் என்று இருப்பவர் சதுரங்கம் ஸ்ரீனிவாச ராவ். (முரளி சர்மா )  இவரது மகள் ஆராத்யா (சமந்தா ). விப்லவும், ஆராத்யாவும் சந்தர்ப்ப வசத்தால் காதல் வயப்படுகிறார்கள்.   காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சில மாதங்கள் கழித்து ஆராத்யா கருவுறுகிறார். ஆனால் கருசிதைவு ஏற்படுகிறது. ஜாதகம், நாள் நட்சத்திரம் பார்க்காமல் செய்தது தான் இதற்கு காரணம் என்கிறார் சதுரங்கம் ஸ்ரீநிவாசராவ். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல்  தர்க்கம் செய்கிறது விப்லவ் குடும்பம். காதலர்கள் மத்தியில் விரிசல் வருகிறது. இறுதியில் ஜெயித்தது காதலா? விஞ்ஞானமா? சாஸ்திரமா? என்று விவரிக் கிறது கதை. 

சந்திராயன் ராக்கெட் விடும் காலத்திலும் ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டுமா? சாஸ்திரங்கள் உண்மையா? இப்படி பல கேள்விகளை நாம் நமக்குள்ளும், பிறரிடமும் முன் வைக்கிறோம். இந்த கேள்விக்கான    பதிலையும் தீர்வையும் முன் வைக்கிறார் டைரக்டர். படத்தில் பாராட்ட பல விஷயங்கள், குறை சொல்ல  சில அம்சங்கள் இருந்தாலும் , படத்தில் மிக சிறப்பாக உள்ள காட்சிகள் காதல் காட்சிகளே. விஜய் தேவராகொண்டா சமந்தா இடையிலான காதல் காட்சிகள் ஒரு கவிதை வாசித்த உணர்வை தருகிறது.

முரளியின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் மலை முகடுகளும், பனிப்பொலிவும் நம்மிடையே பேசுவது போல் இருக்கிறது. அப்துல் வகாபின் இசையில் காதல் பாடல்கள் சிறப்பாக உள்ளது. விஜய் தேவரகொண்டா உருகி உருகி காதலிக்கும் போதும், ஒரு கணவனாக கோபப்படும் போதும் ஆஹா சொல்லவைக்கிறார். சமந்தா காதல், தாய்மை என உணர்வுகளின் கலவையாக இருக்கிறார். சமந்தாவின் நடிப்பு நம்மை நம் வீட்டு பெண்ணை போல் உணர செய்கிறது. முரளி சர்மாவும், சச்சினும் ஒரு ஈகோ பிடித்த அப்பாகளை கண் முன் காட்டுகிறார்கள்.                                சாஸ்திர சம்பரதாயம் மற்றும்    மாடர்ன் சயின்ஸ் இரண்டையும் வைத்து நாம் அடிக்கடி குழப்பிக்கொள்வோம். குஷீ படத்தை பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கலாம்.                                                       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com