விஜய் தேவரகொண்டா-மிருணாள் தாகூர் - ஒரு மாறுபட்ட திரைக்காதல்!

விஜய் தேவரகொண்டா-மிருணாள் தாகூர் - ஒரு மாறுபட்ட திரைக்காதல்!

தெலுங்கின் முன்னணி ஹீரோவான விஜய் தேவரகொண்டா, சமீப காலமாக தமிழ் ரசிகர்களிடமும் நன்கு பிரபலமாகி வருகிறார். கீதா கோவிந்தம் படத்தில் இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டது. சில மாதங்களுக்கு விஜய் தேவரகொண்டா -சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படமும் தமிழ் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது.   

தற்போது கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் பெட்லா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் பதிமூன்றாவது  படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்க்கு VD13 என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளார்கள். சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூர் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து VD 13 படத்தில் ஒரு குடும்ப பின்ணணி கொண்ட காதல் கதையில் நடித்துள்ளார்கள் என்கிறார் பரசுராம் பெட்லா.

விஜய் தேவரகொண்டா சாக்லேட் பாயாக, ரொமான்டிக் ஹீரோவாக ஹீரோவாக அறியப்படுபவர். மிருணாள் தாகூர் சீதா ராமம் படத்தில் காதல் காட்சிகளில் மிக அற்புதமாக நடித்திருந்தார். இந்த இருவரும் இணைந்து திரையில் ஒரு காதல் திருவிழாவை நடத்த உள்ளார்கள் என்கிறது இப்படக்குழு. வரும் அக்டோபர் 18 அன்று படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாக உள்ளது. வரும் சங்கராந்தி நாளில் இப்படம் திரைக்கு வருகிறது. கீதா கோவிந்தம், குஷி படம் போல இப்படமும் தனக்கு தமிழ் ரசிகர்களிடம் நற்பெயரை பெற்றுத் தரும் என எதிர்பார்ப்பில் விஜய் தேவரகொண்டா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com