
பல ஆண்டுகளாக நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது.
சமீபகாலமாகவே பல நடிகர், நடிகைகள் சத்தமில்லாமல் தங்களது நிச்சயதார்த்தம், திருமணத்தை செய்து முடித்து வருகின்றனர். சோசியல் மீடியாவின் சேட்டைகள் அதிகரிக்கவே, சினிமா பிரபலங்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் டிவி பிரியங்கா, நடிகர் சித்தார்த், டாப்ஸி என பல நடிகர், நடிகைகள் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துவிட்டு புகைப்படத்தை வெளியிடுகின்றனர். தற்போது இந்த வரிசையில் விஜய்தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்கள் இவர்கள் நடித்த காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இன்கேம் இன்கேம் பாடல் இன்றளவும் வைரலாகவுள்ளது.
இதற்கிடையே, இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாக செய்தி பரவியது. இருப்பினும் இதுகுறித்து இவர்கள் இருவரின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இவர்கள் வெளியிடங்களில் ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. தொடர்ந்து, இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகியது. மேலும், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விஜய்தேவரகொண்டாவின் இல்லத்தில்,விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு தனியார் விழாவில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.