
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற லியோ திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் மிக நீண்ட சர்ச்சிகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதே மேனன், சாண்டி, மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கி வெற்றி விழா வரை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் முன்னணி ஓடிடிகளில் ஒன்றான நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் நவம்பர் 28ஆம் தேதி முதல் படம் திரையிடப்படும் என்று நெட்பிளிக்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.