'விடுதலை 2' படத்தில் விஜய்சேதுபதி மகன்... வைரல் புகைப்படம்!

'விடுதலை 2' படத்தில் விஜய்சேதுபதி மகன்... வைரல் புகைப்படம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கடைநிலை காவல் அதிகாரியாக நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ்மேனன், கௌதம் மேனன், ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

'விடுதலை' படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாகம் வெளியாகி ஹிட்டானதைத் தொடர்ந்து, 'விடுதலை 2ம் பாகம்' எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 'விடுதலை 2' படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே, 'நானும் ரவுடி தான்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய படங்களில் அப்பாவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத்தில் ஒரு சிறிய குடிசைக்கு வெளியே வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூர்யா மூவரும் அமர்ந்திருக்கின்றனர். இவர், 'விடுதலை 2' படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com