மீண்டும் வந்தாச்சு ஜோடி.. டான்ஸ் ஆட தெரியுமா? அப்போ உடனே கலந்துக்கோங்க!

Jodi Dance
Jodi Dance
Published on

பிரபல விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜோடி டான்ஸ் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நேர்முக தேடல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஜோடி என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் கடைக்கோடி ஒருவரும் பங்கேற்று தன் திறமைகளை வெளிப்படுத்தி கொள்ளலாம். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையானவர்கள் தங்களுக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி கொள்ளலாம்.

அந்த வகையில் பல வருடங்களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி. இதில் பிரபு தேவா, சங்கீதா, ரம்யா கிருஷ்ணன், என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய நடன கலைஞர்கள் பிரபலமாகி சினிமாவில் கால்பதித்து சாதித்து வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக விஜய் டிவியில் வெளியிட்டுள்ள புரோமோவில், நடனத்தில் சாதிக்க துடிக்கும் ஆண்களா, பிரபல பெண் நடன கலைஞர்களுடன ஜோடியாக கைக்கோர்க்கும் தருணம் இது.18 வயது நிரம்பிய ஆண்களாக இருந்தால் இந்த போட்டியில் பங்கேற்கலாம். வெறும் 2 நிமிடத்தில் உங்கள் நடன திறமையை காண்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com