ஹீரோவானார் விஜய் டிவி ரக்‌ஷன்.. வெளியானது படத்தின் டீசர்!

ரக்‌ஷன்
ரக்‌ஷன்

விஜே ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜேவாக அறிமுகமானார் ரக்‌ஷன். ஜாக்குலின் ரக்‌ஷன் காம்போ என்று தான் அதிகம் பேசப்பட்டன. இருவரும் காதலிப்பதாக கூட கூறப்பட்டது,. ஆனால் ரக்‌ஷனுக்கு திருமணம் ஆனதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த வதந்தி முற்றுப்புள்ளிக்கு வந்தது.

தொடர்ந்து ரக்‌ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். அதேபோல தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய "வேட்டையன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரும் அவரது சக விஜய் டிவி தோழருமான கலக்கப்போவது யாரு புகழ் தீனா அவர்களும் இணைந்து "மறக்குமா நெஞ்சம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க 90ஸ் கிட்ஸ் மனதை கவரும்வண்ணம் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை Filia என்டர்டைன்மென்ட்டோடு இணைந்து குவியம் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை யோகேந்திரன் இயக்கியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com