மெரி கிறிஸ்துமஸ்
மெரி கிறிஸ்துமஸ்

’காத்துவாக்குல’ கத்ரீனா கைஃபுடன் ஜோடி சேரும் விஜய்சேதுபதி.. பட்டைய கிளப்பும் போஸ்டர்!

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, புதுப்பேட்டைச், லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய பல படங்களில் பின்னணி நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தனது இயல்பான நடிப்பாலும் கடின உழைப்பாலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். அந்தாதூன் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த கிறிஸ்துமஸுக்கும் இப்படம் வெளியாகாமல் போனது.

மெரி கிறிஸ்துமஸ் என்ற பெயரை கொண்டதால், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியானால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் போது வெளியாகவிருந்த இந்த படம் தற்போது ஒரு ஆண்டை கடந்த நிலையில், வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் ’கத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தின் இறுதிகாட்சியில் விஜய் சேதுபதியை கத்ரினா கைஃப் காதலிப்பதாக சொல்லியிருப்பார்கள்.

இந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com