பல சர்ச்சைகளை தாண்டி வெளிவரபோகும் துருவ நட்சத்திரம்.. இவ்வளவு பெரிய கதை இருக்கா?

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் இது. ஒரு வழியாக பெரிய போராட்டங்களுக்கு பிறகு வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா இன்னும் பலர் நடித்திருக்கின்றனர். Spy Thriller கதை பாணியில் உருவாகியுள்ள படம் தான் துருவ நட்சத்திரம்.

படம் பறந்து வந்த கதை:

துருவ நட்சத்திரம் படத்தின் கதை பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அதிகமாக காதல் படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்த ஸ்பை கில்லர் படத்தின் கதையை முதன்முதலில் சூர்யாவிடம் தான் கூறியிருக்கிறார். சூரியாவிற்கு ஏற்ற கதையாகவே இந்த படம் இருந்திருக்கிறது. இதனை கேட்ட சூர்யாவோ அப்போதைய நாட்களில் ஸ்பை கில்லர் படத்திற்கு மக்களிடம் வரவேற்பில்லை என்று கூறி அதனை ரிஜெக்ட் செய்துள்ளார்.

அடுத்து யாரை தேர்ந்தெடுக்கலாம் என யோசித்த இயக்குனருக்கு கண்ணில் பட்டது ரஜினிகாந்த் தான். அப்போது தான் ரஜினிகாந்தின் கபாலி படம் வெளிவந்தது. ரஜினிக்கு ஏற்றது போல் கதையை மாற்றியும், ரஜினியால் படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. கதை பிடித்தும் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம்

இதற்கடுத்து தான் இந்த கதை சியான் விக்ரமிடையே சென்றடைந்தது. என்ன கேரக்டர் கொடுத்தாலும் அப்படியே மாறும் விக்ரமிற்கு இந்த படத்தின் கதை கேட்டவுடன் பிடித்து போனது. ஒருவழியாக ஹீரோவை ஃபிக்ஸ் செய்த இயக்குனர் அடுத்தடுத்த பணிகளை ஆரம்பிக்க தொடங்கினார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது.

ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டிரைலரில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளும், விகரம் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார் அவரே வில்லன் ஆக கூட இருக்கலாம் என தெரிகிறது. இன்னும் பலரின் பெயரும் அடிப்பட்டு வருகின்றது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த படம் ரிலீஸாக இன்னும் 9 நாட்களே உள்ளன என்பதை குறிக்கும் வகையில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com