எல்ஐசி படத்திற்காக புரோமோஷன் செய்த சோஃபா சிறுவன்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

எல் ஐ சி படம்
எல் ஐ சி படம்

எல்ஐசி படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளத்தில் சோஃபா வியாபாரம் செய்து வைரலான சிறுவன் படக்குழுவினருடன் சேர்ந்து செய்த லூட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கி, பின்பு படத்திற்கு எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக விவசாயி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் தொடங்கியது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சோஃபா விற்று பிரபலமான நிஃப்யா ஃபர்னிச்சர் முகமது ரசூல் என்ற சிறுவன், இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன், அச்சிறுவன் இருக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அச்சிறுவன், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், ரவிவர்மன் உள்ளிட்ட சில நடிகர்களை சோஃபாவாக பாவித்து, அதனை விற்பனை செய்கிறார். இந்த எல்லா சோஃபாவும் படத்தில் நடிக்கிறது என கேலி செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com