விராட் கோலி சிறந்த மனிதர்: கங்கனா ரனாவத் புகழாரம்!

விராட் கோலி சிறந்த மனிதர்:  கங்கனா ரனாவத் புகழாரம்!

ர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ள விராட் கோலியை நடிகை கங்கனா ரனாவத் சிறந்த மனிதர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய மிகச் சிறந்த ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 49 சதத்துடன் முன்னணியில் இருந்ததை முறியடித்து இருக்கிறார் கோலி. மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 29 சதமும், டி20 போட்டியில் ஒரு சதம் என்று சர்வதேச போட்டியில் மொத்தமாக 80 சதங்களோடு முன்னேறி வருகிறார்.

மேலும் விராட் கோலியின் உடைய மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் தொடர் வெற்றிகளை பெற காரணமாக அமைந்திருக்கிறது. இதையடுத்து கோலியை பல்வேறு பிரபலங்கள் தொடர்ச்சியாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகரான கங்கனா ரனாவத் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு அற்புதமான மனிதர். சாதனைகளை செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கோலி ஒரு முன்னுதாரணம். அவர் நடக்கும் பூமியை மற்றவர்கள் வணங்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.

கோலி மதிப்புமிக்க மனிதர், சிறந்த பண்பு கொண்ட உயர்ந்த மனிதர் என்று புகழ்ந்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com