சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதாVijay Kumar

"அடியே மனம் நில்லுனா நிக்காதடி" விஷால் படத்தில் மாஸ் எண்ட்ரி கொடுத்த சில்க் ஸ்மிதா.. ரசிகர்கள் ஷாக்!

Published on

மார்க் ஆண்டனி ட்ரைலரில் சில்க் ஸ்மிதா இட்மபெற்றிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

பீரியட் மூவியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் டைம் டிராவல், ஆக்சன் த்ரில்லர், கேங்ஸ்டர் என பலவிதமான ஜேனரில் இருக்கும் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ட்ரைலரில் சில்க் ஸ்மிதா இடம்பெற்றிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பாகும். இறந்து போன சில்க் ஸ்மிதாவை ட்ரைலரில் கொண்டு வந்துள்ளதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் இல்லை என்று யாரையுமே சொல்ல முடியாது. அந்த அளவு அனைவரையும் கட்டி போட்டவர். இன்றும் அவர் மறைந்த பிறகும் சில்க் ஸ்மிதாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com