இணையதள சூதாட்டத்தை மையக்கருத்தாக கொண்ட "விழித்தெழு" !

விழித்தெழு
விழித்தெழு

இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கத்தில் ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் சார்பில் சி.எம்..துரை ஆனந்த் தயாரித்துள்ள படம் 'விழித்தெழு'. ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் 'விழித்தெழு' திரைப்படம் என்கிறார்கள் படக்குழுவினர்

இணையதள மோசடியை மையக்கருத்தாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரை ப்டத்தின் கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ ஆகியோர் நடித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் ‘விழித்தெழு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நக்கீரன் ஆசிரியர் மற்றும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர். இப்படம் வருகின்ற மார்ச் மாதத்தில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விழித்தெழு படத்தின் இசையமைப்பாளராக நல்லதம்பியும், படத்தொகுப்பாளராக எஸ்.ஆர்.முத்துக்குமார் பணியாற்றியுள்ளனர். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இத் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com