'ராக்கி பாய்' சிவாலயத்திற்கு சென்ற காரணம் என்ன?

Sivan Temple
Actor Yash
Published on

கன்னட சினிமாவை பான் இந்திய அளவில் உயர்த்திய பெருமை கேஜிஎஃப் திரைப்படத்தையே சேரும். இப்படத்தின் நாயகன் யாஷ் ஏற்று நடித்த ராக்கி பாய் என்ற கதாபாத்திரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும். அந்த அளவிற்கு ராக்கி பாய் கதாபாத்திரத்தின் தாக்கம் ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது. இவரது அடுத்தடுத்த படங்கள் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர். பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இராமாயணம் கதையை பான் இந்தியப் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் நடிகர் யாஷ் இராவணன் கதாபாத்திரத்தில் மிரட்ட காத்திருக்கிறார்.

தற்போது டாக்ஸிக் மற்றும் இராமாயணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகர் யாஷ், சமீபத்தில் உஜ்ஜைனியில் இருக்கும் மஹாகாளேஸ்வர் கோயிலுக்கு சென்றுள்ளார். இராமாயணம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், அடுத்ததாக நடிகர் யாஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தர். இராமாயணம் படத்தில் இராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் யாஷ், சிவனைத் தொழுது விட்டு படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காகத் தான் உஜ்ஜைனி கோயிலுக்குச் சென்றுள்ளார் யாஷ். சாமி தரிசனம் செய்த பிறகு இராவணனைப் போல் இல்லாவிட்டாலும் நானும் ஒரு சிவ பக்தர் தான் எனத் தெரிவித்தார் யாஷ்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இராமயணம் படத்தில் நடிப்பதற்கு சிவபெருமானின் ஆசி முழுமையாக வேண்டும் என்பதற்காக தான் நான் உஜ்ஜைனி கோயிலுக்கு வந்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் தீவிரமான சிவ பக்தன். அனைவரும் மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்” என நடிகர் யாஷ் கூறினார்.

2 பாகங்களாக உருவாகும் இராமாயணம் திரைப்படத்தில் இராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சன்னி தியோல் ஹனுமனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும் நடிக்கின்றனர். ராக்கி பாய் நடிகர் யாஷ் இப்படத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு, வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் யாஷ். தற்போது கன்னட நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார். கன்னட சினிமாவின் வெற்றிகரமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேஜிஎஃப் படத்திற்கு பிறகே இவருக்கான திரைத்துறையில் டிமாண்ட் அதிகரித்தது.

இராமாயணம் கதை பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் தற்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இராமாயணத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு தீவிரமாக உழைத்து வருகின்றனர். அதிலும் நடிகர் யாஷை இராவணனாக திரையில் பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஏற்கனவே இயக்குநர் ஓம் ராவத் பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான். ஒரே பாகமாக வெளியான இத்திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் மேலும் இன்னொரு முறை இராமாயணம் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படமாவது ரசிகர்கள் மத்தியில் வெற்றியைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
"எனக்கு இன்ஸ்பிரேஷனே இந்த தமிழ் நடிகர் தான்": ராக்கி பாய் சொன்னது யாரை?
Sivan Temple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com