"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்பு கணக்கு... இந்த பாடலை பாடியவர் யார் தெரியுமா?

siragugal veesi song singer kalpana raghavendar
siragugal veesi song singer kalpana raghavendar

து 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் போடா போடா புண்ணாக்கு பாடல் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த பாடலை பாடியது யாரோ ஒரு சிறுவன் என்றுதான் பலர் நினைத்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்பாடலை பாடியது ஒரு சிறுமி என்று பலருக்கு தெரியாது. போடா போடா புண்ணாக்கு பாடலை அன்று பாடியது கல்பனா ராகவேந்தர் என்ற சிறுமி. இந்த சிறுமி இன்று மிகப்பெரிய பாடகியாக தென்னிந்திய மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கல்பனாவின் தந்தை ராகவேந்தர் ’ஸ்ரீ ராகவேந்தரா’ ’சிந்து பைரவ,’வைதேகி காத்திருந்தால்’ போன்ற பல படங்களில் நடித்தவர்.

அப்பா நடிகராக இருந்ததால் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. புன்னகை மன்னன் படத்தில் கமலுடன் சில காட்சிகளில் குழந்தையாக நடித்திருப்பார் கல்பனா. டப்பிங், பாடல், நடிப்பு என பன் முக திறமை கொண்டவராக இருந்த கல்பனாவை  நம் தமிழ் சினிமாவை விட அதிகம் தெலுங்கு, மலையாள மொழி படங்கள்தான் அதிகம் ஆதரித்தன. இந்த மொழிகளில் இவர் பாடிய பாடல்கள் கல்பனாவிற்க்கு நட்சத்திர பாடகி அந்தஸ்தை பெற்றுத்தந்தன.

தமிழில் ’மாயாவி’ படத்தில் வரும்  ”கடவுள் தந்த அழகிய வீடு”,பிரியமான தோழி படத்தில் இடம் பெறும் ”பெண்ணே நீயும் பெண்ணா” பாடல்கள் உட்பட பல பாடல்கள் அதிக ரசிகர்களை பெற்றுத்தந்தன.  அதேபோல், ஜோதிகா நடிப்பில் வெளியான ’36 வயதினிலே’ படத்தில் வரும்  ”சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்” என தொடங்கும் பாடலில் ஒரு சுதந்திர உணர்வு கொண்ட பெண்ணின் மனதை தனது அழகிய குரலால் கண் முன் கொண்டு வந்திருப்பார் கல்பனா.

திருமண என்ற விஷயம் கசப்பான அனுபவங்களையே கல்பனாவிற்க்கு தந்தது. திருமணத்தோடு பெண்ணின் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்தவர்களுக்கு "போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு" என்று பதில் சொல்லிவிட்டு தன் பணியில் கவனம் செலுத்தினார் கல்பனா.

மலையாள சேனல் நடத்திய இசை போட்டியில் கலந்து கொண்டார் கல்பனா. போட்டியில் நீதிபதியாக பங்கு பெறும் திறமை இருந்தும் பொருளாதார நெருக்கடி காரணமாக போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு கோடி பரிசு பெற்றார் கல்பனா. 

சுமார் 1500 பாடல்கள் 3000 மேடைநிகழ்ச்சிகள் செய்த கல்பனா ராகவேந்தர் சிறந்த பாடகியாகவும், நம்பிக்கை பெண்மணியாகவும் வலம் வருகிறார். கல்பனா மேலும் ஜொலிக்க வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com