தீபாவளி ரிலீஸில் முக்கியத்துவம் பெறாமால்போகும் சிறிய படங்கள்...பிரபலங்கள் சொல்வது என்ன?

தீபாவளி ரிலீஸில் முக்கியத்துவம் பெறாமால்போகும் சிறிய படங்கள்...பிரபலங்கள் சொல்வது என்ன?
Published on

தீபாவளி என்றாலே புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும். அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி பின்பு ரஜினி கமல் படங்கள் தவறாமல் தீபாவளி நாளில் வெளியாகும். இந்த பெரிய ஹீரோக்கள் படங்களோடு சேர்த்து அடுத்த நிலையில் இருக்கும் ஹீரோக்கள், பிரபல இயக்குனர்களின் படங்களும் வெளியாகும்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தீபாவளி அல்லது வேறெந்த பண்டிகை நாட்களிலும்  பெரிய பட்ஜெட்டில் உருவாகும்  மாஸ் ஹீரோ படங்கள்  மட்டுமே வெளிவருகிறது. ஏன் சிறு பட்ஜெட் படங்கள் சிறிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவதில்லை என்பதுதான் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தீபாவளி ரிலீஸ் பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் தானா? என்ற கேள்வியை சில திரைபிரபலங்களிடம் முன் வைத்தோம். அவர்கள் சொன்ன சுவாரஸ்மான பதில்கள் உங்களின் பார்வைக்கு

நடிகர், இயக்குனர் ரா.பார்த்திபன்: 

1989 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று என் முதல் படமான புதியபாதை படத்தை  ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர் நீங்கள் உங்கள் படத்தை வெளியிடும் நாளில் கமல் சார் நடித்த அபூர்வ சகோதரர்கள் வெளியாகிறது. கமல் படத்துடன் உங்கள் படம் நிற்காது என்று கூறி பணத்தை திருப்பி தந்து தந்துவிட்டார்.

நான் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் என் படத்தை வெளியிடுவேன் என உறுதியாக இருந்து புதிய பாதையை வேறொரு டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக ரிலீஸ் செய்தேன். படம் பெரிய வெற்றி பெற்றது.

இன்று இது போன்ற சூழ்நிலை இல்லை என்பது உண்மை. இன்று படம் வெளியான மறுநாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். இன்னும் சிறிது நாளில் படம் வெளியாவதற்கு முன்பே வெற்றி விழா கொண்டாடி விடுவார்கள் போல் தெரிகிறது.

இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியான ஒரு வாரத்தில் வசூல் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தீபாவளி நாளில் பெரிய ஹீரோ அல்லாத மற்ற படங்களை எதிர்பார்க்க முடியாது.  தலை தீபாவளி தலை கீழ் தீபாவளியாக மாறி வருகிறது என்கிறார்.

நடிகை கஸ்தூரி:  

முப்பதாண்டுகளுக்கு முன்பு 1992 தீபாவளி நாளில் தேவர் மகன், திருமதி பழனிச்சாமி, ராசுக் குட்டி, பாண்டியன் படங்களுடன் நான் நடித்த செந்தமிழ் பட்டு படம் வெளியாகி வெற்றி பெற்றது என்னால் இன்று வரை மறக்க முடியாது.

பழைய தியேட்டர்களில் 1000 இருக்கைகள் வரை இருந்தன இப்போது பல தியேட்டர்களில் 200 இருக்கைகள் தான் இருக்கின்றன. எனவே ஒரே படத்தை அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. நமது கலாச்சாரம், லைப் ஸ்டைல் போன்றவற்றில் கார்ப்பரேட் தாக்கம் இருப்பது போல் சினிமாவிலும் இருக்கிறது இதை தவிர்க்க முடியாது என்கிறார்.  

தயாரிப்பாளர் மற்றும் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்த்தர்கள் சங்க தலைவர் கே. ராஜன்:

ன்றைக்கு தீபாவளி நாளில் மட்டுமல்ல மற்ற நாட்களில் கூட ஒரு பெரிய ஹீரோ படத்துடன் மற்ற சிறு படங்கள் வெளியாகும் சூழ்நிலை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் நாளில் ஏழு சிறு படங்கள் வெளியாகின. ஒரு படம் கூட வெற்றி பெற வில்லை.

இத்தனைக்கும் அன்றைய நாளில் பெரிய ஹீரோ படம் எதுவும் வெளியாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் ஒருவாரதிற்க்கு மேல் தியேட்டரில் தாக்கு பிடித்தால் பார்க்கலாம் அல்லது ஒடிடியில் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் வந்து வந்துவிட்டது.

லவ் டுடே, டாடா போன்ற சில சிறிய படங்கள் கடந்தாண்டு வெற்றி பெற்றது. பெரிய ஹீரோ படங்களுடன் இந்த படங்கள் வந்திருந்தால் இப்படங்கள் காணாமல் போய் இருக்கும். ஆயிரத்திற்க்கும்  சிறிது குறைவான தியேட்டர்கள் தான் தமிழ் நாட்டில் உள்ளன. எனவே பெரிய ஹீரோக்கள் படம் தீபாவளிக்கு வந்தால் மற்ற சிறு ஹீரோக்கள், சிறிய பட்ஜெட் படங்களை எதிபார்க்க முடியாது என நிதர்சனத்தை போடுடைகிறார் ராஜன்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்:

ண்டிகைக்கு பல படங்கள் வந்த காலங்களில் படத்தின் பட்ஜெட் குறைவு. அந்த காலகட்டத்தில் இருந்த பட்ஜெட்டை விட இப்போது ஐந்து மடங்கு பட்ஜெட் உயரந்து விட்டது. இன்று சிறிய ஹீரோ, சராசரி சிறிய படங்களுக்கு ஐந்து முதல் இருபது கோடி வரை செலவானால் ஒரு பெரிய ஹீரோ படத்திற்க்கு 200 கோடி பட்ஜெட் வரை ஆகிறது. இது monopoly அல்ல, மார்க்கெட்டிங்தான்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்
தயாரிப்பாளர் தனஞ்செயன்

இந்த சூழ்நிலையில் பெரிய ஹீரோ நடிக்கும் படம் வெளியானால் இந்த படம் மட்டுமே பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியாகும். இது தவிர்க்க இயலாது. இது சினிமா வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். இந்த மாற்றத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டு தன் அபிமான ஹீரோ  நடித்த படத்தை பண்டிகை நாளில் திரையில் பார்த்து கொண்டாட  தயாராகி வருகிறார்கள். இதுதான் இன்றைய சினிமாவின் நிலையாக உள்ளது"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com