ரஜினி பையோபிக் வெளிவருமா? அப்ப புரியல, இப்ப புரியுது!

Rajinikanth
Rajinikanth

தனுஷ் சமீபத்தில் இளையராஜா பையோ பிக்கில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடும்போது தனக்கு ரஜினி பையோ பிக்கில் நடிக்கவும் ஆசை என்று கூறினார். இதனையடுத்து ஒருசில வருடங்களுக்கு முன்னர் ரஜினியே பையோ பிக் பற்றி ஒரு இயக்குனரிடம் பேசியிருப்பதுப் பற்றி இப்போது நினைவுக்கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு இறுதியிலிருந்தே தனுஷ் இளையராஜாவின் பையோ பிக்கில் நடிப்பார் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆகையால் அவ்வப்போது X தளத்திலும் தனுஷ் மற்றும் இளையராஜா ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. அதேபோல் பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் மீண்டும் சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும் என்று இணையத்தில் பேசப்பட்டது. அந்தவகையில் இந்த வாரத்தில் தனுஷ் இளையராஜா பையோ பிக்கில் நடிப்பதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அந்த நிகழ்ச்சியில் இளையராஜா, தனுஷ், வெற்றி மாறன், கமலஹாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இளையராஜா என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஷ்வரன் படத்தை இயக்குகிறார். இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட கமல், இளையராஜா படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முதலில் இந்தப் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக அருண் மாதேஷ்வரன் இயக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கிறாரா என்பதுப்பற்றி இன்னும் சொல்லவில்லை.

இதனையடுத்து அந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது தான், இரண்டு பேருடைய வாழ்க்கையில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒன்று இளையராஜா மற்றொன்று ரஜினிகாந்த் என்று கூறினார்.

இதனையடுத்து ரஜினிகாந்த் பையோ பிக்கும் வருமா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தனுஷ் குடும்பப் பிரச்சனை காரணமாக ரஜினிகாந்த் பையோபிக்கில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கவனிக்கத்தக்கது அந்த விஷயமல்ல. தனுஷ் மட்டுமல்ல யாருமே ரஜினிகாந்த் பையோபிக்கில் நடிப்பது கேள்விக்குறிதான்.

இதையும் படியுங்கள்:
"கடவுளுக்கே இந்த நிலையா" சத்குரு உடல்நிலை குறித்து நடிகை கங்கனா வருத்தம்!
Rajinikanth

ஏனெனில் ஒருசில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் ஒருவர் ரஜினியிடம் அவருடைய பையோ பிக் எடுப்பதைப் பற்றி பேசியிருக்கிறார். ''அப்போது ரஜினி பையோ பிக்னா எல்லாம் உண்மையா இருக்கனும். என்னுடைய முழு கதையை கூறினால் மக்கள் என்னை வெறுத்துவிடுவார்கள்.'' அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அப்போது செய்தி பரவியது.

இப்போது அந்த விஷயத்தில் கவனம் செலுத்திப் பார்த்தால், ரஜினி பையோ பிக் வருவது கஷ்டம்தான். ஆனால் ஒருவேளை ரஜினி ஒப்புக்கொண்டால் விறுவிறுவென்று வேலைகள் தொடங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com