ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்த யசோதா படம் நவம்பர் 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இது தான் சமந்தாவின் முதல் பான் இந்திய படமாகும். யசோதா தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. யசோதாவை அனைவருக்கும் பிடித்துவிட்டது. சமந்தாவின் யசோதா படம் இந்தியாவிலும், ஏன் அமெரிக்காவிலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.
யசோதா படத்தில் நடித்தபோதே மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் சமந்தா. யசோதா படத்தில் நடிக்கும் பொது அதை படக்குழுவிடம் சொல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட போது தான் படக் குழுவுக்கே தெரியும் என்கிறார்கள் படக்குழுவினர் .
யசோதா படம் இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 400,000 டாலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் ரூ. 3.50 கோடி வசூலித்திருக்கிறது. படம் பார்க்கும் அனைவரையும் சமந்தாவும், வரலட்சுமியும் கவர்கிறார்கள்.
பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்திருக்கும் யசோதா நேற்று மட்டும் பல கோடிகளை வசூலித்தாது. முன்னணி ஹீரோக்களுக்கு இணைய சமந்தாவின் மார்க்கட் நிலவரம் திரையுலகினரையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது .