ஆண்டு இறுதியான இந்த மாதத்தின் 29ஆம் தேதி 11 படங்கள் வெளியாகவுள்ளன.
சினிமாவில் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி எடுத்த படங்கள் வெளிவருவதும் அவ்வளவு சுலபமல்ல. அப்படி தட்டு தடுமாறி படம் வெளியேறினாலும் அதை வெற்றி பெற செய்வதே படக்குழுவினரின் பெரும் சவாலாகும்.
2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டுக்குள் செல்லவிருக்கிறோம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம், அயலான் உள்ளிட்ட பெரிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இத்தனை படங்கள் வெளியாவதால் சின்ன படங்களுக்கு மவுசு இருக்காது.
இதனால் இந்த மாத இறுதியில் பல படங்கள் வெளியாகவுள்ளன. அதாவது டிசம்பர் 29ஆம் தேதி மொத்தம் 11 படங்கள் வெளியாகவுள்ளன. 29ஆம் தேதியை அடுத்து சனி, ஞாயிறு, புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை இருப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்ற கணிப்பில் அனைத்து படங்களும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மன்சூர் அலிகானின் சரக்கு, சோனியா - பாக்கியராஜ் நடிப்பில் மூன்றாம் மனிதன், சுரேஷ் ரவியின் நந்திவர்மன், வட்டார வழக்கு, மதிமாறன், ரூட் நம்பர் 17, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜெய் விஜயம், பேய்க்கு கல்யாணம், மூத்த குடி, டிக் டாக் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.