நடிகர் அஜித் கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வந்தாலும், பைக் ரைடிங் செய்வதிலும் அதீத காதல் கொண்டவர். படப்பிடிப்பு முடிந்து ரிலாக்ஸாக இருக்கும் வேளைகளில் தனது குடும்பத்தினரோடு ஒரு பக்கம் செலவிட்டாலும், மறுபுறம் பைக் ரைடிங் செய்து பல இடங்களுக்கும் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
அந்தவகையில் பைக் ரைட் மீது அதிக ஆர்வம்கொண்ட அஜித், கடந்த ஆண்டு உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல இடங்களுக்கும் பைக் ரைட் செய்து, பின்னர் பூடான், நேபாள் உள்ளிட்ட நாடுகளுக்கும் பைக் ரைடிங் சென்றுள்ளார்.
இதற்கிடையே தனது ஷூட்டிங் வேலைகளையும் கவனித்து வரும் அஜித் தற்போது 'விடாமுயற்சி' பட ஷூட்டிங் காரணமாக சற்று பைக் ரைடிங்கிற்கு இடைவெளி விட்டுள்ளார். பின்னர் மீண்டும் நவம்பர் மாதம் தனது பைக் ரைடிங்கை தொடருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித் சமீபத்தில் ஒரு பிஸினஸ் ஒன்றையும் ஆரம்பித்தார். அதுவும் பைக் சுற்றுலா மையப்படுத்தியே அந்த பிசினஸை அமைத்துக்கொண்டார். அதற்கு ஏகே மோட்டோ ரைட் என பெயரிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதாவது உலக பைக் ரைட் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்றவிதமாக இந்த புது நிறுவனம் செயல்படும் எனவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் தனது புது நிறுவனத்திற்காக 10 பைக்குகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். இந்த பைக் ஒவ்வொன்றின் விலை சுமார் 1 கோடி 25 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சினிமாவில் நடித்து சம்பாதித்தாலும், தற்போது புது பிசினஸ் ஒன்றையும் துவங்கி அதிலும் தன்னை பிசியானவராக மாற்றிக்கொண்டார் நடிகர் அஜித்.