ராஜமௌலியின் அடுத்த படம்! ஹீரோ அதே சூப்பர் ஸ்டார்தான்! வெளியான சூப்பர் அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படம்! ஹீரோ அதே சூப்பர் ஸ்டார்தான்! வெளியான சூப்பர் அப்டேட்!

Published on

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், ராணா நடிப்பில், 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'பாகுபலி'. 2 பாகங்களாக வெளியான இத்திரைப்படம் இந்திய சினிமாவையே ஹாலிவுட்டுக்கு இணையாக அண்ணாந்து பார்க்க வைத்தது.

இந்திய மொழிப்படங்களிலும் ஹாலிவுட்டுக்கு நிகராக பிரம்மாண்டங்களை புகுத்தமுடியும் என்பதை நிரூபித்துக் காண்பித்தார். அந்தளவுக்கு அப்படத்தில் போர்க்காட்சிகளும், கிராஃபிக்ஸ் வடிவமைப்புகளும் படத்திற்கு பக்கபலமாக இருந்ததோடு, மிகப்பெரிய வசூல் வேட்டையும் நடத்தியது.

அதன்பின்பு, ராஜமௌலி என்றாலே பிரம்மாண்ட இயக்குநராக பார்க்கப்பட்ட நிலையில், அவரது இயக்கத்தில் அடுத்து என்ன பிரம்மாண்டம் வரப்போகிறதோ என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடந்தாண்டு, அவரது அடுத்த படைப்பான 'RRR' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருந்த நிலையில், இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் தட்டிச்சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

இதையடுத்து, அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், இவரது அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ராஜமௌலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க சாகசக் காட்சிகள் நிறைந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படம் குறித்து, ஆகஸ்ட் 9ம் தேதி நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் என்பதால், அதுவும் மகேஷ் பாபு கூட்டணி என்பதால், இதுவும் பிரம்மாண்டமாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com