வெற்றி பெற்றது மாமன்னன்.. அனுபவங்களை பகிர்ந்த படக்குழுவினர்.. கலகல பேச்சு!

mari selvaraj - udhayanidhi stalin
mari selvaraj - udhayanidhi stalinIntel
Updated on

மாமன்னன் திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர்கள், படப்பிடிப்பு குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வணிக ரீதியாகவும் இப்படம் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், சென்னையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உதயநிதி, தனது படங்களிலே அதிக வசூலை ஈட்டியது மாமன்னன் என்று கூறினார்.

மாமன்னன் படத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய கீர்த்தி சுரேஷ், வருங்காலத்தில் பெண் நடிகர்களுக்கும் இயக்குநர்கள் பிரதான கதாபாத்திரத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

படப்பிடிப்பின் போது நகைச்சுவை முகத்தில் வந்துவிடக் கூடாது என்று மிகவும் சிரமப்பட்டதாக வடிவேலு கூறினார்.

இறுதியாக பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், வடிவேலுவின் காமெடி காட்சியை பார்த்தே, தான் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டதாக கூறினார்.

மாரி செல்வராஜின் எமோஷனலான பேச்சு சுமார் ஒரு மணிநேரத்தை கடந்து சென்றது. இதனை தொடர்ந்து இருக்கையில் இருந்து எழுந்து சென்ற உதயநிதி, மாரி செல்வராஜை ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்தார்.

அப்போதும், மாரி செல்வராஜின் முதுகை ஆரத்தழுவிய வடிவேலு தனது பாணியில் நகைச்சுவையாக அவரை உற்சாகப்படுத்தினார்.

logo
Kalki Online
kalkionline.com