பேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் அறை: சம்பளத்துக்கு ஆள் நியமித்த இளைஞர்!

பேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் அறை: சம்பளத்துக்கு ஆள் நியமித்த இளைஞர்!

Published on

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவர், தான் பேஸ்புக் பார்த்தால் தன்னை கன்னத்தில் அறைவதற்காக இளம்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்துள்ளார். இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து அந்த அமெரிக்கா வாழ் இந்தியரான மனீஷ் சேதி கூறியதாவது:

நான் பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பேஸ்புக் பார்க்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாமல் பல மணீநேரம் வீணடித்து வந்தது. அதனால்தான் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இணையதள பக்கம் ஒன்றின் மூலமாக காரா என்ற இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன். ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம்! நான் எப்போதெல்லாம் பேஸ்புக் பக்கத்திற்கு நுழைகிறேனோ, அப்போதெல்லாம் காரா என் கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும். அதுதான் அவரது வேலை. இப்போது அறைக்கு பயந்தே பேஸ்புக் பக்கம் போவதில்லை.

இவ்வாறு தெரிவித்தார் மனீஷ் சேதி. அமெரிக்க பிரபலம் எலான் மஸ்க் உடபட பலரை இச்சம்பவம் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com