பேஸ்புக்கின் புதிய பெயராக ‘மெட்டா’ என மாற்றம்: மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!

பேஸ்புக்கின் புதிய பெயராக  ‘மெட்டா’ என மாற்றம்: மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!

பேஸ்புக் சமூக வலைதளத்தின் புதிய பெயராக மெட்டா (META) என்று மாற்றப் பட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கை உலகம் முழுவதும் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஃபேஸ்புக் பெயர் அதன் தாய் நிறுவனத்தின் பெயரான 'மெட்டா' என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதுகுறித்து அந்த கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதாவது:

பேஸ்புக் நிறைய சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டது. அந்த வகையில் பேஸ்புக் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது.அதேச்மாயம் பெயர் மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளதே தவிர, தங்களது செயலிகள், அவற்றின் பிராண்டுகள் மாறவில்லை..அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி என்னுடைய கவனத்தை திருப்பி வருகிறேன். இதில், அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அமெரிக்க பங்கு சந்தையில் ஃபேஸ்புக்கின் குறியீடு எம்.வி.ஆர்.எஸ் என மாற்றப்படுகிறது. இது டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இவ்வாறு ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com