0,00 INR

No products in the cart.

ஃபிரான்ஸ் எப்படி இருக்கு..?

“ஃபிரான்சு எப்படி பாப்பா இருக்குது?”

“நல்லா இருக்குதுங்பா. ஒரு பிரச்னையும் இல்லங்பா.”

“கல்லூரி பிடிச்சுப் போயிடுச்சா ?”

“பிடிச்சிருக்குங்பா. பொறுமையா சொல்லித் தராங்க. எதுன்னாலும் எத்தனை வாட்டி வேணாலும் கேட்கலாம். நாங்களும் நிறைய நெட்ல தேடிப் படிச்சுக்கறோம்.”

“மக்கள் எப்படி இருக்காங்க ?”

“எல்லாரும் அமைதியா இருக்காங்க. வெள்ளிக்கிழமை மத்தியானம் ஆயிடுச்சுன்னா வேலை செய்ய மாட்டாங்க. அப்புறம் திங்கட்கிழமை மத்தியானம்தான் வேலைக்கு வர்றாங்பா. கடற்கரையில எல்லாம் எந்நேரமும் தனித்தனியா நிறைய பேரு உட்கார்ந்து கடலைப் பார்த்துட்டு இருக்காங்க.”

“ஓ…”

“எவ்வளவு பெரிய பணக்காரங்கன்னாலும் பொதுப்போக்குவரத்துலதான் போறாங்க, வர்றாங்க. இல்லாதவங்க இருக்கப்பட்டவங்கன்னு யாரும் எதுவும் பார்க்கறதில்ல. வீதியில நடந்து போறவங்கள பயப்படுத்தாம மெதுவாத்தான் கார் ஓட்டணும். அப்படிப் பயப்படும்படியா ஓட்டினாலோ, நடக்கறவங்க மேல முட்டினாலோ பெரிய நஷ்ட ஈடு தரணுமாம்.”

“இது நல்லாருக்கே.”

“நீஸ் நகரத்தைக் காலேஜ்லயே ஒரு பஸ் ஏற்பாடு பண்ணிக் கூட்டிப்போய்ச் சுத்திக் காட்டினாங்க. எல்லா இடத்தையும் பார்த்தோம். இடையில ஒருநாள் ஆண்டிப்சு நகரத்தைச் சுத்திப் பார்த்தோம். பிக்காசோ அருங்காட்சியகம், நெப்போலியன் தங்கியிருந்த இடம், கடற்கரை, சொகுசுப் படகுத்துறை, நீட்சே சிந்திச்ச எடம்னு இங்க நிறைய பார்த்தேன். போட்டோஸ் அனுப்பிச்சேன்… பார்த்தீங்களா?”

“பார்த்தேன். போறதுக்கு முன்னால காணொளியில் பார்த்த இடங்களை நேர்ல பார்க்க நல்லாருந்துருக்குமே.”

“ஆமாங்பா. அப்புறம் இங்கிருந்து மொனாகோன்னு ஓர் இடம். ஃபிரான்சுக்குள்ள இருக்கிற தனி நாடு மாதிரி. அங்கேயும் போனோம். கார் பந்தயமெல்லாம் அங்க நடக்குது. அந்த ஊர் அரசர் கார் மியூசியம் ஒன்று வெச்சிருக்கார். அங்கே அவருடைய கார் கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இருக்கு. நூறு வருசமா அவர் சேர்த்த நூத்துக்கணக்கான கார்களைப் பார்த்தேன்.”

“ஆமா. படமெல்லாம் செமயாதான் இருந்துச்சு.”

“இனி அடுத்த மாசம் இரண்டாம் வாரம் விடுமுறை விடறாங்க. இத்தாலி போலாம்னு இருக்கோம். இங்கிருந்து ரோமுக்கு விமானம்.”

“எல்லாச் சாலைகளும் உரோம் நகரை நோக்கியே செல்கின்றனன்னு அங்கே ஒரு பழமொழி சொல்வாங்க. நம் தலைமுறையில அது உன்கிட்ட பலிச்சிருக்கு. எப்படிப் போறீங்க?”

“ஏற்கெனவே அங்கே போய்ட்டு வந்த மாணவிகள் எப்படிப் போகணும், இத்தாலில என்னென்ன பார்க்கலாம், எங்கே தங்கலாம்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதன்படி நாங்க ஒரு மூன்று பேர் போறோம். ஒன்றரை மணி நேர பிளைட் பயணம். டிக்கெட் விலை பார்த்தீங்கன்னா பன்னிரண்டு யூரோ. நம்மூரு காசுல வெறும் ஆயிரத்து நூறுதான்.”

“அடடே… மிகவும் குறைவாயிருக்கே.”

“ஆமாங்பா, இங்க ஃப்ளைட் டிக்கெட் எல்லாம் கம்மிதான். கிழக்கு யூரோப்புக்குப் போறதுன்னா நாலஞ்சு யூரோவுல ஃப்ளைட்ல எல்லாம் போகலாம். நம்மூரு பணத்துல ஐந்நூறுதான்.”

“உனக்கு வழிசொன்ன தோழிகள் ஏன் வரலயாம் ?”

“அவங்க எல்லாம் ஆம்ஸ்டர்டாம் போறாங்க. அதுக்கு ஃப்ளைட் அறுபது யூரோ. அதனால் அப்புறம் போய்க்கலாம்னு நாங்க இங்க போறோம். கிறிஸ்துமஸ் சமயத்துல ஒரு விடுமுறை வரும். அப்ப பார்த்துக்கலாம்.”

“அந்த விடுமுறையில ஃப்ரான்சை முழுசாகப் பார்க்கப் பயன்படுத்திக்கோ. கிறிஸ்துமஸ் நாளில் நீ பாரீசுல இருந்தால் சிறப்புத்தான்.”

“ஆமாங்பா.”

“அப்ப உரோம்ல எங்கெங்கே போகப்போறீங்க?”

“முதல்ல உரோம்ல சுத்திப் பார்ப்போம். அங்கே கொலோசியம்னு ஒரு பகுதி இருக்காம். அதைப் பார்க்கணும்.”

“ ‘கிளாடியேட்டர்’ படத்துல காட்டுனாங்களே அந்த மைதானம் பாப்பா அது. ஐயாயிரம் ஆண்டு வரலாறு தழைத்தோங்கிய இடம். கட்டாயம் போய்ப் பாருங்க.”

“அப்புறம் வாடிகனுக்குப் போறோம்.”

“சிறப்பு போப்பாண்டவரையே பார்க்க வாய்ப்பிருக்கும்போல.”

“அங்க இடங்களை எல்லாம் பார்க்கலாம். இரண்டு மூன்று நாளில் சுத்திப் பார்த்துட்டு அங்கிருந்து உள்ளூர் ஃப்ளைட்ல மிலன் நகரத்திற்குப் போறோம்.”

“மிலன் நகரமா ? அதுதான் உலகின் பேஷன் கேபிடல் நகரம். தோன்றெழில் தலைநகரம். இந்த வயசுல அங்கே சுத்திப் பார்க்கக் கொடுத்து வெச்சிருக்கணும்.”

“ஆமாங்பா. அங்கே எல்லாம் சுத்திப் பார்த்துட்டு வரும்போது பஸ்லேயே வரப்போறோம். எல்லாம் சேர்ந்து ஒரு வாரம் திட்டமிட்டிருக்கோம்.”

“அருமை பாப்பா. நான் வாழ்க்கை முழுக்கக் கேள்விப்பட்ட நகரங்களைக் கடகடன்னு பார்க்கும் வாய்ப்பு உனக்குக் கிடைச்சிருக்கு. எல்லாத்தையும் பாரு. மனசையும் அறிவையும் பெரிசாக்கிக்க. அந்தப் புத்துணர்ச்சியோடு வந்து படிப்பில் கவனமாகு.”

“சரிங்கப்பா.”

கவிஞர் மகுடேசுவரன் முகநூல் பக்கத்திலிருந்து…

 

 

 

 

 

 

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அந்த குழந்தைகளில் ஒன்று வளர்ந்தவுடன் பிற்காலத்தில் போலந்து நாட்டின் பிரதமராகியது.

0
முகநூல் பக்கம்   (ப்யாரீப்ரியன்.பெரிய ஸ்வாமி) இணையப் பக்கத்திலிருந்து...      இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் போலந்து நாட்டினை கைப்பற்றச் சென்றபோது, போலந்து நாட்டைச் சேர்ந்த 500 பெண்களையும்,200 குழந்தைகளையும் ஒரு ராணுவக் கப்பலில் ஏற்றி அவர்களை...

என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.

0
முகநூல் பக்கம்     நெல்லை கணேஷ் முகநூல் பக்கத்திலிருந்து...   உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப்...

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....