Dinapalan 2023
மிதுனம் - 07-02-2023
இன்று வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உங்களின் பணதேவை பூர்த்தியாகும்.
திருவாதிரை: நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6