0,00 INR

No products in the cart.

குருவின் பல்லக்கு பவனி..வைபவத் திருநாள்!

-சக்தி சாமிநாதன்.

ருமபுர ஆதீனம் பட்டிணபிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குதலுக்கு தமிழக அரசு தடைவிதித்து, பின்னர் தடையை நீக்கி உத்தரவிட்டது. இச்சம்பவம்  இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பு ஏற்படுத்தியது. 

சுமார் 15-ம் நுற்றாண்டிலிருந்து மயிலாடுதுறை அருகே வீற்றியிருக்கும் தருமபுர ஆதீனம் சார்பாக நடைபெறும் பட்டிணபிரவேசம் என்கிற 10 நாள் குருபூஜை விழாவில்குருவை பல்லக்கில் தூக்கி வலம் வரும் நிகழ்வுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதி கோட்டாட்சியர் பட்டினபிரவேச உலாவுக்கு தடை விதித்திருந்தார்.

ஆயினும் இதற்கு பல்வேறு ஆன்மிக அமைப்பினர், மற்ற ஆதீனங்கள், சைவ மடங்கள், வைணவ மடங்களைசார்ந்த ஜீயர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, பட்டிண பிரவேம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இப்பிரச்சினை தமிழக சட்டமன்றம் வரை எதிரொலித்தது. இதையடுத்து தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி  அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில் ஆதீன பட்டினப் பிரவேசம் என்பது என்ன, பல்லக்கு தூக்கும் தாத்பர்யம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள தருமபுர ஆதீனம் சென்றோம்..

தருமபுர ஆதீனம்.

ஆன்மீகமும், பழமையும் நிறைந்த ஒரு அமைதியான சூழ்நிலையில், நம்மை வரவேற்றது தருமபுர ஆதீனம் .குருமகாசன்னிதானத்தை சந்தித்து விளக்கம் அறிய முற்பட்ட போது,  ஒரு கோவில் குடமுழக்கு விழா காரணமாக சந்திக்க இயலாத சூழ்நிலையில், சன்னிதானம் இருப்பதாக தெரிவித்தனர் மடத்தின் நிர்வாகிகள்.

இதையடுத்து சைவ நெறியை பின்பற்றி வாழ்ந்து வருபவர்களும்,ஆதீன மடங்களை முழுமையாக அறிந்த ஆன்மீக பெரியோர்களிடம் இது குறித்து கருத்துக்களை கேட்க விரும்பினோம்.. 

முதலில் ’ஜோதி மலை  இறைபணி திருக்கூட்டம் நிறுவனர்’  தவத்திரு  திருவடி குடில் சுவாமிகள் சொல்லத் தொடங்கினார்.. 

‘’தமிழகத்தில், ஆதீனங்கள் தோன்றியது கிட்டதட்ட 14 –ம் நூற்றாண்டில் ஆகும். தமிழ்நாட்டில் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் சூரியனார் கோயில், வேளாகுறிச்சி உட்பட 18 ஆதீனங்கள் இருக்கின்றன.சைவ, சமயத்தை பொறுத்தவரை,திருநீர், ருத்ராட்சம், பஞ்சாட்ரம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழகத்தில், ஆதீனங்கள் தோன்றுவதற்கு மூல காரணம் மறைஞான சம்பந்தர்உமாபதி சிவம் போன்ற நால்வர்  பெருமக்களே.  இவர்கள் காலம் 12-ம் நூற்றாண்டாகும். இந்த 18 ஆதீனங்களையும் அங்கீகரிப்பது, அபிட்டான சிந்தாமணி என்ற நூல் ஆகும்.

ஆதீனம் என்றால் சைவமLங்கள் என்பதாகும். திருவானைக்கா  உலாவில்
காளமேகப் புலவர் 18 ஆதீனங்களை அடையாளப்படுத்தியுள்ளார். மேலும் தற்போதைக்கு, ஆதீனங்கள் குறித்த விளக்கத்திற்கு ஊரன் அடிகள் எழுதிய நூல் ஒரு அஸ்திரமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த அபிட்டான சிந்தாமணி என்ற இந்த நூலில் 18 ஆதீனங்கள் குறித்த விளக்கங்கள் இருக் கின்றன.

தமிழகத்தில், ஆதீனங்களை பொறுத்தவரை ஒரு சில இடத்தில் மட்டுமே குருபீடம் இருக்கின்றன. அதற்கு நிலங்களும் கொஞ்சம் இருந்து வருகின்றன. இவர்றில் இல்லறம்சார்ந்த  சில மடங்களும் உண்டு. ஆனால் திருவாவடுதுறை, தருமபுரம் போன்றவை , சன்னியாசி மடங்களாக திகழ்கின்றன. இந்த மடங்களில், குருமார்கள் சித்தியானவுடன், அவரரது சீடர்களில் பரிபக்குவம் அடைந்த ஒருவருக்கு தீட்சை கொடுக்கப்பட்டு, குருவாக அமர்த்தபடுகின்றனர்.

சன்னியாசி மடங்களில் இவ்வாறு தீட்சை கொடுப்பதில் பட படிநிலைகள் உண்டு. முதல் தீட்சை என்பது நெற்றியில் திருநீறு பூசும்
தீட்சை! பின்னர் சமய தீட்சை, விசேஷ தீட்சை, என பல தீட்சைகள் இருக்கின்றன. .இப்படி, படிப்படியாக சான்னியாசம் பெற்ற பிறகே,அடுத்த கட்டமான ஆச்சாரியார் அபிஷேகம், சன்னியாசிகளுக்கு செய்து வைக்கபடுகிறது. அதன் பிற்கே அவர் ’இளைய சன்னிதானம்’  என்று அழைக்கபடுவார். .குருமகா சன்னிதானம் இருக்கையில்,இளைய சன்னிதானம் எதற்கு என்றும் ஒரு  கேள்வி எழும்.

ஆதீன,பீடத்தில் குருவாக வீற்றியிருப்பவர்கள்,சிவோக பாகம் கைவரப் பெற்றதனால், சைவ சித்தாந்தத்தில் கூறுவதை போல அத்துவதம் என்ற இறைவனுடன் ஒன்றிய மனோபாவத்தில் இருப்பார்களாம். அதனால், மடத்து நிர்வாகங்க இளைய சன்னிதானம் மேற்கொள்வார். 

 பொதுவாக ஆலயங்களில் 10 நாட்கள், பிரமோற்சவம், திருவிழாக்கள் நடப்பது போலத்தான் மடங்களிலும் வருடம்தோறும் 10 நாட்கள் குருபூஜை விழா நடைபெறுகிறது. குருநாதரை கொண்டாடும் சைவ மரபின்படி இந்த குருபூஜை விழா 10 நாட்கள் கொண்டாடபடுகின்றன. மேலும் சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெறும்.

குருபூஜை விழாவின் 10-ம் நாள் விழா என்பது, அந்த மடத்தை ஸ்தாபித்த குருமார்களின் நட்சத்திர தினத்தன்று கொண்டாடபடுகிறது. இந்த குருபூஜை 10-நாள் விழாவில், அநத மடத்தின்  குருமகா சன்னிதானத்தை, பீடத்தில் ஏற்றி கொண்டு வருவார்கள்,. அதாவது  ஒரு கோயிலில் பல்லக்கு புறப்பாட்டின் போது, எப்படி சுவாமி எழுந்தருளி,  பஞ்ச மூர்த்தி புறப்பாடு மற்றும் தேர்வலம் நடக்குமோ, அதுபோல விமரிசையாக நடந்தேறும். 

 குருமகா சன்னிதானத்திற்கு பல்லக்கு தயாரிக்கப்பட்டு, அவரை அதில்  அமர வைத்து வீதிகளில் பல்லக்கு பவனியாக வலம் வருவார்கள்.அப்போது அங்கு கூடியிருக்கும் பொதுமக்களுக்கு குருமகாசன்னிதானம் ஆசி வழங்குவார்கள்.

இவ்வாறு  சன்னிதானத்தை பீடத்தில் ஏற்றும் பல்லக்கை ’பீடாரோகணம்’ என அழைப்பார்கள். இந்த பீடாரோகணத்தை அடியார்கள் தோளில் சுமந்து நான்கு வீதிகளில் வலம் வரும்போது, குருவுக்கு, காணிக்கையாக, பழங்கள், வஸ்திரங்கள் என மக்கள் சமர்ப்பிப்பார்கள். இப்படி குருவானவர் பல்லக்கில் பட்டிண பிரவேசம் செய்வது சைவ மரபு.

சிதம்பரத்தில் நடராஜர் வீதி உலா வரும் போது, தேவாதி தேவர்களும் வீதியில் வந்து நிற்பார்களாம். அதுபோல குருபூஜை விழாவின் 10-ம் நாள் விழாவில் குரு ,வீதியுலா வரும் போது, அடியார்கள் வீதியில் காத்திருந்து வழிபடுவார்கள்.அந்தளவுக்கு  அது, ஒரு தெய்வீக திருநாளாகும். குருபூஜையில் உலா வர குருநாதருக்கு செய்ய கூடிய பல்லக்கு ,சிவிகை என்றும் கூறப்படும். திருஞானசம்பந்தருக்கு சிவபெருமானே சிவிகை அளித்தார் என்று,பெரிய புராணம் சிறப்பம்சத்தோடு Uதிவு செய்கிறது.

மற்றொரு உதாரணமாக – திட்டச்சேரி அருகே இருக்கும் நெல்வாயில் அறத்துறை பகுதியில், ஞானசம்பந்தர் கால்நடையாக,
யாத்திரை செல்லும் போது,அவருக்கு கால் சுடுமே,என்று அந்த ஞான குழந்தைக்கு சிவபெருமானே பல்லக்கு கொடுத்திருக்கிறார்.

மடங்களை பொறுத்தவரை, குருவின் பல்லக்கை,சீடர்களே விரும்பி தோளில்
சுமக்கின்றனர். யாரும் யாரையும் நிர்பந்திப்பதும் இல்லை.யாரும் கூலிக்கு
குருவின் பல்லக்கை சுமப்பதும் இல்லை, பட்டிண பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்வு மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வு என்பதை விட குருவும் சிஷ்யர்களும் ஒன்று கூடும் வைபவ திருநாளாகவே போற்றலாம்.’’ என்று சொல்லி முடித்தார், திருவடிகுடில் சுவாமிகள்.

சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் தெரிவித்ததாவது:

’’ தற்போது தருமபுர ஆதீன குருவாக இருப்பது 27-வது குருமகா சன்னிதானம்
500 ஆண்டுகளாக 26-குருமகா சன்னிதானங்கள் இந்த மடத்தை வழி நடத்தியுள்ளார்கள் . பட்டிண பிரவேசம் என்பது அடியார்கள் குருவுக்கு செலுத்தும் நன்றி உணர்ச்சி விழா ஆகும்’’ என்றார்’’ சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம்.

’’தருமபுர ஆதீனம் சுமார் ’500 ஆண்டுகளுக்கு மேலாக 27 ஆலயங்களை தன் அருளாட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரித்து வருகிற்து. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மயிலாடுதுறையில் அரசு இடம் தேடிய போது,தருமபுரம் ஆதீனம், தாமே முன்வந்து 60 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா  சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்’’  என்றார், மத்திய அரசு வழக்கறிஞரான ராஜேந்திரன்.

ஆன்மீகயிலாளர் பண்ணை சொக்கலிங்கம் கூறுகையில், ’’600 ஆண்டுகளாக கல்வியையும், தமிழையும், சைவத்தையும், பாதுகாத்து வந்த தருமபுர ஆதீன குரு சன்னிதானத்தின் குருபூஜை விழா மயிலாடுதுறை மக்களின் திருவிழா நாளாகும்’’ என்று சொல்லி முடித்தார். 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘வந்தே மாதரம்’  வீரியத்துடன் ‘1770’ படம்! 

0
-லதானந்த்  பிரபல வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலைத் தழுவி தயாராகிறது ‘1770’ என்ற திரைப்படம்.  சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான...

100 ஆண்டு காணும் எழுத்தாளர் அகிலன்; சில நினைவுகள்! 

0
- ஜே.வி.நாதன்.  தமிழ் எழுத்தாளர்களில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர் எழுத்தாளர் அகிலன். அவர் எழுதிய ‘சித்திரப் பாவை’ என்ற நாவலுக்கு 1975-ல் இந்த விருது கிடைத்தது. இப்போது அகிலன் அவர்களின் நூற்றாண்டு விழா...

பிரதமர் கையால் ஷொட்டு வாங்கினேன்!

1
பேட்டி: ஜிக்கன்னு. தமிழகத்திற்கு..வரும். வட நாட்டு தலைவர்களுக்கு..மொழி பெயர்ப்பாளர்களை நியமிப்பதில் தாவு தீர்ந்து விடும். அதிலும் பிரதமர் மோடி போன்றவர்கள் கணீரென்று காத்திரமாகப் பேசும்போது, அதற்கு ஈடான குரலில் அழுத்தம் திருத்தமாகப் பேசி கருத்துக்களை...

நான் சாட்சி மட்டுமே: ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

0
-சிறப்பு பேட்டி: ஜே.வி.நாதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு  ‘ஸூம்’ மூலம் பேட்டி..  பிரபலமான ஓர் அரசியல்வாதியின் தவிர்க்க முடியாத வருகை நிகழ்வு…  -இத்தனை பரபரப்புக்கு மத்தியில் பிஸியாக இருந்த ராக்கெட் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன்...

செஸ் கொண்டாடும் மகாபலிபுரம்!

0
-சிறப்பு கட்டுரை: காயத்ரி. உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது மகாபலிபுரம்..  ஏற்கனவே சரித்திர பிரசித்தி பெற்ற பல்லவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய நகரம்... அழகிய கடற்கரை.. குடைவரை சிற்பங்கள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்.. காதலர்களின்...