0,00 INR

No products in the cart.

சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்கிறேன்; லலித் மோடி!

– வீரராகவன்.

பிஎல் கிரிக்கெட் போட்டியின் முன்னாள் தலைவரான லலித் மோடி, பண மோசடி வழக்கு விவகாரத்தில் சிக்கி லண்டனுக்கு பறந்தோடினார்.  இந்நிலையில் முன்னாள் ‘மிஸ்.யுனிவர்ஸ்’ பட்டம் வென்ற இந்திய அழகியான சுஷ்மிதா சென்னுடன் தான் தற்போது டேட்டிங் செய்து வருவதாக லலித் மோடி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முன்னாள் தலைவரான  லலித் மோடி கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.470 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக பிசிசிஐ புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது

இது தொடர்பாக அமலாக்கத்துறை லலித் மோடி மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. ஆனால் பலமுறை விசாரணைக்கு அழைப்பு விடுத்தும் லலித் மோடி ஆஜராகாத நிலையில் அவரைக் கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது..

கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட லலித் மோடிஇந்தியாவில் தனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வழக்கு விசாரணையை தவிர்த்ததோடு இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார்

இந்நிலையில் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் லலித் மோடி, தற்போது பாலிவுட் நடிகையும், முன்னாள் ‘மிஸ்.யுனிவர்ஸ்அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து லலித் மோடி, தனது டிவிட்டரில் அதிகாரபூர்வ தகவலைப் பகிர்ந்ததோடு, சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ‘’எனது பெட்டர் ஹாஃப்’’ என்றும்  ‘’புதிய வாழ்க்கை தொடக்கம்’’ என்றும்  பதிவிட்டுள்ளார்

மேலும் லலித் மோடி அதில் ‘’ நாங்கள் இருவரும் இப்போது டேட்டிங்கில் இருக்கிறோம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் விரைவில் அதுவும் ஒரு நாள் நடக்கும்’’ என்று லலித் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுஷ்மிதா சென் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை  1994-ல் வென்ற சுஷ்மிதா சென், ‘தஸ்தக்என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி, தமிழ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், 1997ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கியரட்சகன்திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும், ஷங்கர்அர்ஜுன் கூட்டணியில் வெளியானமுதல்வன்படத்தில், ஷக்கலக பேபியாக சுஷ்மிதா சென் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.  மேலும்  ஆர்யா 2  என்ற வெப் சீரியலில் நடித்து இருந்தார்.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாத சுஷ்மிதா சென், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அவர் சமீபத்தில் தனது காதலர் ரோஹ்மன் ஷாலலுடனான உறவை முறித்து கொண்டதாக அறிவித்த நிலையில், தற்போது லலித் மோடியுடனான காதல் விவகாரம் ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

261,078FansLike
1,920FollowersFollow
11,300SubscribersSubscribe

Other Articles

பிரதமர் கையால் ஷொட்டு வாங்கினேன்!

1
பேட்டி: ஜிக்கன்னு. தமிழகத்திற்கு..வரும். வட நாட்டு தலைவர்களுக்கு..மொழி பெயர்ப்பாளர்களை நியமிப்பதில் தாவு தீர்ந்து விடும். அதிலும் பிரதமர் மோடி போன்றவர்கள் கணீரென்று காத்திரமாகப் பேசும்போது, அதற்கு ஈடான குரலில் அழுத்தம் திருத்தமாகப் பேசி கருத்துக்களை...

நான் சாட்சி மட்டுமே: ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

0
-சிறப்பு பேட்டி: ஜே.வி.நாதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு  ‘ஸூம்’ மூலம் பேட்டி..  பிரபலமான ஓர் அரசியல்வாதியின் தவிர்க்க முடியாத வருகை நிகழ்வு…  -இத்தனை பரபரப்புக்கு மத்தியில் பிஸியாக இருந்த ராக்கெட் விஞ்ஞானி திரு நம்பி நாராயணன்...

செஸ் கொண்டாடும் மகாபலிபுரம்!

0
-சிறப்பு கட்டுரை: காயத்ரி. உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது மகாபலிபுரம்..  ஏற்கனவே சரித்திர பிரசித்தி பெற்ற பல்லவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய நகரம்... அழகிய கடற்கரை.. குடைவரை சிற்பங்கள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்.. காதலர்களின்...

நீட் சாதனை: சூரஜ், S/O மகாலட்சுமி!

1
பேட்டி: பிரமோதா. நீட் தேர்வு என்றாலே..ஒரு வித பயத்துடன் அதனை அணுகுபவர்களிடையே...சூரஜ் சற்றே வித்தியாசமானவர்..முயற்சி செய்தால் முடியாது என்பதே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்து உள்ளார். நீட் தேர்வின் ...இளநிலை தேர்வு எழுதுவதற்கே தலையால்...

தேர்தல் பிரசாரத்தில் சுட்டு கொலை!

0
-ஜி.எஸ்.எஸ். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஜூலை 8-ம் தேதி நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் உடனடியாக  ஹெலிகாப்டரில்...