பிரமாண்ட நாயகன்”: பாம்பே ஞானம் இயக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் திரைப்படம்!

பிரமாண்ட நாயகன்”: பாம்பே ஞானம் இயக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் திரைப்படம்!

-சாந்தி கார்த்திகேயன்

பிரமாண்ட நாயகன்' என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய புராண வரலாறு திரைப்படமாக உருவாகி, விரைவில் வெளீயாகவுள்ளது. இந்த படத்தை பாம்பே ஞானம் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் ஶ்ரீனிவாசப் பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதியாக  ஆனார் என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீனிவாசன், வேதவன், மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஆரியன் ஷாம் ஏற்று நடித்திருக்கிறார். இவர் இந்தியன் வங்கியின் நிறுவனர் மறைந்த கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன் ஆவார். அவர் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ பயணத்திற்கு முழு நிதி உதவிப் பொறுப்பை ஏற்றவர்.

இந்தத் திரைப்படத்தை கலைமாமணி பாம்பே ஞானம் இயக்கியிருக்கிறார். இவர் சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், தியாகராஜர் ஆகிய மகான்கள் பற்றிய நாடகங்கள் தயாரித்துப் புகழ்பெற்றவர்.

''மகான்கள் பற்றி ஏற்கனவே பல நாடகங்கள் தயாரித்திருந்தாலும், இந்த திருப்பதி ஏழுமலையான் படத்தை இயக்கியது தனிஅனுபவம். இதற்காக முழுமையாக விரமிருந்து என்னைத் தயார் படுத்தி கொண்டேன்'' என்கிறார் பாம்பே ஞானம்.

இவர் மட்டுமல்ல.. ஶ்ரீனிவாசப் பெருமாளாகவும், வேங்கடாஜலபதியாகவும், மகாவிஷ்ணுவாகவும் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆர்யன் ஷாமுக்கும் இது புது அனுபவம். அவரும் முறையாக விரமிருந்து, திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்துவிட்டே முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

''கடவுள் பற்றிய பக்திப் படத்தில் நாயகனாக நடிப்பதற்கு கொஞ்சம் மனத்தயாரிப்பு எனக்குத் தேவைப்பட்டது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ஸ்ரீராகவேந்திரா படத்தை பலமுறை பார்த்து சில விஷயங்களைக் கற்றுகொண்டேன். அதன்பிறகே திருப்பதி வெங்கடாசலபதி வேடத்தை ஏற்று நடிக்கும் உத்வேகம் ஏற்பட்டது'' என்றார் ஆர்யன்.

இந்நிலையில் இந்த  'பிரம்மாண்ட நாயகன்' பக்தி படத்தின் ஹீரோவான ஆர்யன் ஷாமுக்கும், இயக்குனர் பாம்பே ஞானத்துக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அக்கடிதத்தைல்,  திருப்பதியின் வரலாறு மற்றும் இறைவன் திருப்பதி வெங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரு மொழி திரைப்படமான இந்த படத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.துஸ்மாந்த குமார்தாஸ், திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, மனம்நெகிழ்ந்து, ஆர்யன் ஷ்யாமை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டி மனமார வாழ்த்தியிருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் மகாலட்சுமியாக அதிதியும், பத்மாவதித் தாயாராக சந்தியாஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஒளிப்பதிவு எஸ். ஆனந்த்பாபு, மற்றும் இசையமைப்பு திவாகர் சுப்பிரமணியம் ஆகியோர். படம் விரைவில் இருமொழித் திரைப்படமாக தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com