0,00 INR

No products in the cart.

ஞானச்சுடர் வீசும் கார்த்திகை தீபம்!

ஜெயலட்சுமி கோபாலன்

தீபம் ஏற்றுவது பாபம் போக்கும் என்பர் ஆன்றோர். இருள் என்னும் பாவத்தை நீக்கி, ஞானம் என்னும் அருள் ஒளி பாய்ச்சுவது தீபத்தின் சிறப்பாகும். அனைவரும் இல்லத்தில் தினந்தோறும் தீபம் ஏற்றி வணங்குவது இந்து சமய தர்மம் ஆகும். மேலும், அனைத்து சமயங்களுமே தீபத்தின் மேன்மையை பறை சாற்றுகின்றன. இறையடியார்களும் இறைவனை தீப ஜோதி வடிவாகக் கண்டு வணங்கி உள்ளனர். வள்ளல் பெருமான்,அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை, தனிப்பெரும்கருணைஅருட்பெருஞ்சோதிஎன்று துதிக்கிறார். சைவ அடியார் பெருமக்களும் ஈசனை,ஆதிந்தம் இல்லா அருட்பெருஞ்சோதியானவன்என்கின்றனர்.

வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார், திருமாலை வணங்கும்போது, உலகை அகலாக்கி, கடலை நெய்யாக்கி, சூரியனை விளக்காக ஏற்றித் துதிக்கின்றார். பூதத்தாழ்வார், அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, இன்புருகு சிந்தையை திரியாக்கி, ஞானத்தை சுடர் விளக்காக ஏற்றித் துதிக்கின்றார். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வாரோ,முடிச்சோதியாய் உன் முகச்சோதி மலர்ந்ததுவோஎன்றும், மற்றொரு பாசுரத்தில்,சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதியேஎன்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பல்வேறு விதத்தில் பல பெரியோர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆச்சாரியார்களும், மகான்களும், ஜோதிச்சுடர் வடிவாக இறைவனைப் போற்றித் துதிக்கின்றனர். அவ்வகையில் கார்த்திகை மாதம் முழுவதுமே நம் இல்லம் முழுவதும் மாலை வேளைகளில் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து வணங்குவதும், நம் இல்லமே ஜோதிமயமாகக் காட்சி தருவதும் கார்த்திகைக்கு உண்டான தனிச்சிறப்பாகும்.

ந்த கார்த்திகை மாதத்தில்தான் சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப்பட்டு, ஆறுமுகப் பெருமான் சரவணப் பொய்கையில் திருவதாரம் செய்தார். ஆங்கார வடிவமான சூரபத்மனை, ஓங்கார வடிவமான முருகப் பெருமான் சக்தி வேலால் சம்ஹரித்து வெற்றி வடிவேலனாக அருள்பாலித்தார். குமரக் கடவுளின் தந்தையான சிவபிரான் அயனும், ஹரியும் அடி முடி காணாத அருட்பெருஞ்ஜோதியாக, அருணாசலமாகக் காட்சி தந்தார். எனவே, திருவண்ணாமலையில் சித்தர்கள் தொழும் அம்மலையின் உச்சியில் மஹாதீபம் ஏற்றி, கார்த்திகை தீப விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இவ்வாறு திருக்கார்த்திகை என்றாலே, தீபம். தீபம் என்றாலே, திருக்கார்த்திகை என்று பேசும் அளவிற்கு கார்த்திகை மாதமே தீபப் பிரகாசமாகக் காட்சி தருகிறது. நாமும் அறிவு என்ற அகல் வைத்து, மெய் எனும் உடலைத் திரியாக்கி, நல்லெண்ணத்தையெல்லாம் நெய்யாக்கி, பக்தி என்னும் சுடரை ஏற்றுவோம். அதன் மூலம் நமது வாழ்க்கை ஞான ஒளியாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கட்டும்.

கார்த்திகையில் பஞ்சமுக தீபம்!

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி தீபமேற்றக்கூடாது. அதேபோல், இன்று ஒரு முக தீபமேற்றினால் நினைத்த காரியங்கள் நடைபெறும், இரு முக தீபமேற்றினால் குடும்பம் சிறக்கும், மும்முக தீபமேற்றினால் புத்திர தோஷம் நீங்கும், நான்கு முக தீபமேற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முக தீபமேற்றினால் சகல நன்மைகளும் உண்டாகும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து தொழில்களும், தத்புருஷம், சத்யோஜாதம், ஈசானம், அகோரம், வாமதேவம் என ஐந்து முகங்கள் சிவபெருமானுக்கு உண்டு. இந்த உலகுக்கு அடிப்படை ஆதாரமாக நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், என ஐந்து பூதங்கள் உள்ளன. இவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாகக் கருதப்பட்டு வருவதால், ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றுவது நல்லது. அதேபோல், ‘நமசிவாயஎன்ற ஐந்தெழுத்து திருமந்திரத்தை குறிப்பதாகவும் ஐந்து முகங்கள் உள்ளன.
தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. நெய் தீபம் ஏற்றினால் சுகமான வாழ்வு கிடைக்கும். விளக்கெண்ணெய்யில் தீபமேற்றினால் புகழ் ஏற்படும். நல்லெண்ணையில் தீபம் ஏற்றினால் பீடைகள் அகலும். முக்கூட்டு மற்றும் ஐங்கூட்டு எண்ணெய்களில் தீபமேற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கே.சூரியோதயன்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...

கோமாதா; நம் குலமாதா!

0
- கே.பாலகிருஷ்ணன் பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், ‘ஆநிரை காப்பான்’ நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி...