குழந்தைகளின் உரிமைகள்

குழந்தைகளின் உரிமைகள்

வணக்கம் குழந்தைகளே!

உங்களுக்கு எங்கள் குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களை கௌரவிக்கும் வகையிலும் குழந்தைகளுக்கும் நேருவுக்கும் இடையே உள்ள அளப்பரிய அன்பின் காரணமாகவும் 1964ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இவ்வாறு கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் இதே நவம்பர் மாதம் 20ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளை அளிப்பதே இந்த உலகக் குழந்தைகள் தினத்தின் நோக்கம் ஆகும். 1990ம் ஆண்டு முதல் நவம்பர் 20ம் தேதி உலக குழந்தைகள் தினமாகவும் குழந்தைகள் உரிமைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளுக்கான உரிமை என்பது சமூக, பொருளாதார, கலாச்சார, குடிமை உரிமைகளை உள்ளடக்கியதாகும்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, அவர்களுக்கான உரிமைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:

  1. 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி

  2. ஆபத்து இடர் உள்ள வேலையிலிருந்து பாதுகாக்கப்படுதல்

  3. பராமரிப்பு மற்றும் கல்வி

  4. துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்படுதல்

  5. பொருளாதாரத் தேவைக்காக வயது அல்லது உடல்  வலிமைக்கு பொருந்தாத தொழில்களை அணுகுவதலிருந்து பாதுகாக்கப்படுதல்

  6. ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் மற்றும் வசதிகள் அளிக்கப்படுதல்

  7. சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமை மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தல்.

குழந்தைகளுக்கான உரிமைகள் தினமான இந்த நாளில் மற்ற சிறப்பு தினங்களைப் போன்று அன்று பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் கிடையாது. பள்ளிகளில் தேசியக் கொடியேற்றி ஆரம்பிக்கப்படும் இந்தக் கொண்டாட்டமானது ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் சிறப்புச் சொற்பொழிவுகள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்கெல்லாம் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

குழந்தைகளுக்கு எனத் தனிப்பட்ட ஒரு நாள் என்பது பல்வேறு நாடுகளிலும் உண்டு. எடுத்துக்காட்டாக நமது அண்டை நாடுகளான இலங்கையில் அக்டோபர் 1 ம் தேதி, பங்களாதேஷில் மார்ச் 17ம் தேதி, சீனாவில் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com