இரண்டில் ஒன்று புதிர்கள்

இரண்டில் ஒன்று புதிர்கள்

ஒரு  சொல்லுக்கு இரண்டு பொருள்கள் இருக்கலாம்.  அந்த இரண்டு அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  சொற்களைக் கண்டுபிடியுங்கள்.  எடுத்துக்காட்டாக உணவு, ஒரு பறவை ஆகிய இரண்டு அர்த்தங்கள் கொண்ட சொல் அன்னம்.

1. ஆசை, பிடித்துக்கொள்

2. பாதி, இடுப்பு

3. ஒத்துக்கொள், சங்கீதம்

4. அடுப்பில் பயன்படுத்தப்படும் எரிபொருள், யானை

5. அறிவு, நிலவு

6. தொடங்கு என்பதன் எதிர்ச்சொல், தலையில் இருக்கும்

7. ஓர் இசைக்கருவி, ஆடை

8. இடம், மணம்

9. அடக்கம் கொள், வேலை

10. துருவித்துருவி கேட்டல், மழைக்காலத்தில் உதவும்

11. ஒரு மலர், ஒருவித நிலப்பகுதி

12. காவிய நாயகி, இந்தியத் தலைமை

விடைகள்

1. பற்று

2. அரை

3. இசை

4. கரி

5. மதி

6. முடி

7. உடுக்கை

8. வாசம்

9. பணி

10. குடை

11. குறிஞ்சி

12. திரெளபதி

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com