சூறாவளி!

இயற்கை சீற்றங்கள்!
சூறாவளி!

ழகான மாலை நேரத்தில் நம் உடலை  ஜிலீ ரென்ற காற்று மென்மையாக மோதினால் எத்தனை சுகமாக இருக்கும்! ஆனால் அதே காற்று, அளவுக்கு மீறிய வேகத்துடன், சுழன்று சுழன்று வீசினால் அதை எப்படி ரசிப்பது? அப்படியான காற்றுக்குப் பெயர்தான் சூறாவளி.

ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து வீசக்கூடிய குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று, அதற்கு நேர் எதி ரான திசையில் இருந்து வீசுகின்ற சூடான மற்றும் ஈரப்பதம் நிறைந்த காற்றுடன் மோதுவதன் காரணமாக அந்தப் பகுதியில் மிகப்பெரிய விசை உருவாகிறது. அந்த விசையைக் கொண்டு காற்றானது அதிகபட்ச வேகத்துடனும் சுழன்று சுழன்றும் வீசத் தொடங்குகிறது. அதனைத்தான் சூறாவளி என்கிறோம்.

சுழல்காற்று என்றும் இதற்கு இன்னொரு பெயர் உண்டு. எதிரெதிர் திசையில் இருந்து வருகிற காற்றுகள் மோதுகிற வேகத்தைப் பொறுத்து சூறாவளியின் வேகம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சாலையில் நடந்து செல்லும் மனிதர்கள் தொடங்கி மரம், செடி, கொடிகள், பெரிய பெரிய வாகனங்கள், கட்டடங்கள் ஆகியவற் றையே அடியோடு பெயர்த்து வீசும் அளவுக்கு வலிமை நிறைந்த சூறாவளிகள் எல்லாம் உலகின் பல இடங்களில் வீசியிருக்கின்றன. அவற்றின் வேகம், தாக்கம், சேதத்தின் அளவு ஆகியவற்றைக்கொண்டு சூறாவளியை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். முக்கியமாக மூன்றைச்சொல்லவேண்டும். டைபூன், ஹரிக்கேன், டார்னடோ. குறைந்தபட்சம் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத் திலும் அதிகபட்சம் மணிக்கு 177 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடிய சுழல் காற்றைத்தான்  சூறாவளி என்கிறோம். இத்தகைய வேகத்துடன் வீசக்கூடிய சூறாவளியானது நிலப்பரப்பை தாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வெகு சொற்ப மானது.

நிலப்பரப்பைத் தாக்கி, அதில் உள்ள மரங்கள், வாகனங்கள், மனிதர்கள் உள்ளிட்டவற்றைச் சேதப் படுத்துவதற்கு பத்து விநாடிகள்கூட போதுமானது என்கிறார்கள் வல்லுநர்கள்.  

வானத்தில் சூறாவளிகள் சுழலத் தொடங்கும் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு முந்நூறு மைல்கள் இருக்கும் பட்சத்தில் ஒன்றரை கி.மீ பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒரே விநாடியில் துவம்சம் அடைந்துவிடும். அதன் காரண மாகவே சூறாவளிகளை வானத்தின் சுனாமி என்றும் சொல்கிறார்கள்.

புவியியல் மற்றும் இயற்கை அறிவியல் வல்லுநர்கள் சூறாவளியை அதன் வேகத்தின் அடிப் படையிலும் பண்புகளின் அடிப்படையிலும் பல் வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதலில் வேகத்தின் அடிப்படையிலான பிரிவுகளைப் பார்க்கலாம். சூறாவளிகள் மொத்தம் ஆறு வகை. F0, F1, F2, F3, F4, F5.

F0, F1, என்ற இரண்டும் சாதாரண வகை சூறாவளிகள். காற்று வேகமாக வீசும். ஆனால் பெரிய அளவில் சேதங்கள் இருக்காது. F2, F3, என்ற இரண்டும் சற்றே வீரியமிக்க சூறாவளிகள். காற்று சற்றே பலமாகவும் சுழன்று சுழன்றும் வீசும். மனிதர்கள் சாலையில் நடக்க முடியாது. வாகனங்களின் வேகம் தடைபடும். சிறிய மற்றும் பலமற்ற மரங்கள் பெயர்த்தெறியப்படும்.

F4, F5, என்ற இரண்டும் ஆபத்தான வகையைச் சேர்ந்த சூறாவளிகள். காற்று கட்டுக்கு அடங்காத வேகத்தில் வீசும். அதன் காரணமாக ஆபத்துகளும் சேதங்களும் அதிகமாக இருக்கும். இத்தகைய சூறாவளிகள் ரயில் போன்ற கனரகமான வாகனங்களையே கவிழ்த்து விடக்கூடியவை. பெரிய பெரிய வீடுகளை தரைமட்டமாக்கக்கூடியவை. ராட்சத அளவிலான மரங்கள்கூட வேரோடு பிடுங்கப்பட்டுள்ளன. கார், வேன், மோட்டார், சைக்கிள் போன்ற  வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வீசியெறிப்பட்டுள்ளதும் நடந்துள்ளது. உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை இந்த இரண்டு வகை சூறாவளிகளே. சூறாவளியின் பண்புகள், குணாதிசயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Supercell Tornadoes என்ற சூறாவளிகள் மேகங்களைக் கருவாகக்கொண்டு சுழன்று வீசக்கூடியவை.  ஒரு பக்கம் மழை பொழியும். இன்னொரு பக்கம் சுழல் காற்று வீசும்.

நிலப்பரப்பில் இருக்கக்கூடிய மணல் மேடுகளைக் கருவாகக் கொண்டு சுழன்று வீசக் கூடிய சூறாவளிக்கு Landspout என்று பெயர். அதிவேகத்துடன் வீசக் கூடிய சுழல் காற்றோடு, மணலும் கலந்து வீசுவதால் மனிதர்கள் வெளியே நடந்து செல்வது சிரமம்.

Gustnado  என்பது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாத, மிகவும் பலவீனமான சூறாவளி. இத்தகைய சூறாவளி வீசும்போது காற்று சற்றே வேகமாக வீசும். அப்போது அதிக அளவில் தூசுகள் கிளம்பும்.

Waterspout  என்பது கடல், ஆறு, ஏரி, அருவி போன்ற நீர்ப்பரப்பில் ஏற்படக்கூடிய சூறாவளி. இத்தகைய சூறாவளிகள் நீர்ப்பகுதியைத் தாக்கி, நிலப்பகுதியை நெருங்குவதற்குள் அதன் வீரியத்தை இழந்துவிடுகின்றன. ஆனால் இத்தகைய சூறாவளிகள் வீசும்போது நாம் நீர்ப்பகுதியில் இருக்கும்பட்சத்தில் ஆபத்து நிச்சயம்.

Dust Devils என்பது பாலைவனப் பகுதியில் வீசுகிற சூறாவளி. அதிக அளவில் வெயில் அடிக்கும் நேரத்தில் வீசுகிற இத்தகைய சூறாவளியின்போது காற்றோடு பாலைவனத்தில் இருக்கக்கூடிய மணல் உள்ளிட்ட தூசுகளும் கலந்துவீசும்.

Waterspout என்ற சூறாவளியை நெருப்புச் சூறாவளி என்றும் சொல்லலாம். இதுதான் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அதிவேகமான காற்று சுழன்று சுழன்று வீசும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக உலர்ந்துபோன இலை, தழைகள், காய்ந்து போன மரங்கள் எரிவதன் காரணமாக பெரிய அளவில் நெருப்பு உருவாகும். அத்தகைய நெருப்பு ஜ்வாலைகளை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் சூறாவளி, அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்ந்து, அங்கும் தீ விபத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய நெருப்புச் சூறாவளிகளால் அழிந்துபோன விளைநிலங்களும் குடியிருப்புகளும் அநேகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com