திருவிழா

கவிதைத் துளிகள்
திருவிழா
gokulam strip
gokulam strip

வானத்திலே திருவிழா

வாங்க வாங்க பார்க்கவே

வேக வேக மாகவே

மேக மெல்லாம் ஓடுதே!

மேளம் அங்கே முழங்குது!

மின்னல் வாணம் ஜொலிக்குது!

வானத்துக்கும் பூமிக்கும்

வண்ணப்பாதை தெரியுது!

 

வேண்டுதல்

சாமி கோயில் போகலாம்

சந்தோஷமாய் பாடலாம்

பூமி வாழ வேண்டலாம்

புத்தி தரக் கேட்கலாம்

நல்ல வல்ல மனிதராய்

நாளும் நாமும் வளரவே

எல்லாம் வல்ல இறைவனை

இன்றும் என்றும் வேண்டுவோம்!

தேன் தேன்

தேன் தேன்

கொம்புத் தேன்

தேடித் தேடி

எடுத் தேன்

பாத்தி ரத்தில்

வடித் தேன்

பாட்டி யிடம்

கொடுத் தேன்

பாடம் எல்லாம்

படித் தேன்

பங்கு வைத்துக்

குடித் தேன்.

மல்லிகைப் பூ

ல்லிகைப்பூ கம கமத்து

மணக்கு தம்மா தலையிலே

மற்ற நகை எதுவும் இந்த

மலர்களுக்கு நிகரிலை!

கொல்லையிலே தோட்டம் வைத்து

செடி வளர்த்தால் தேவலை

கொள்ளை யாகப் பூக் கிடைக்கும்

அம்மாவுக்கும் செலவிலை!

- ரா.பொன்ராசன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com