வானவில்லைப் பாரம்மா!

வானவில்லைப் பாரம்மா!

கவிதை!
gokulam strip
gokulam strip

வான வில்லைப் பாரம்மா! – அதில்

வர்ண ஜாலம் ஏதம்மா?

வான மீதில் பாலமாய் அதை

வைத்துச் சென்றது யாரம்மா?

ந்தி ரன்கை வில்லாமோ? – இது

ஈச னாரின் வில்லாமோ?

அந்த நாளில் இராமனின் தோள்

அமர்ந் திருந்ததிவ் வில்லாமோ?

ருண தேவனின் வில்லாமோ? – அவன்

வளைக்கும் மேக வில்லாமோ?

அருள் நமக்கே அம்பு மழையை

அளிக்க வந்த வில்லாமோ?

வான வில்லைப் பாரம்மா! – அதில்

வர்ண ஜாலம் ஏதம்மா?

- நா.சீ. வரதராஜன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com