விலங்கியல் உலகின் ராஜாக்கள் - இவர்களைத் தெரியுமா...?

அக்டோபர்- 4 சர்வதேச விலங்குகள் நல தினம்!
விலங்கியல் உலகின் ராஜாக்கள் - இவர்களைத் தெரியுமா...?

காட்டுக்கு ராஜா சிங்கம்தான்:

ந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் சிங்கங்கள் 200 கிலோ எடை வரை வளரும், இதன் ஒரு நேர உணவு 400 பவுண்டு இறைச்சி, வேட்டையின்போது 1000 கிலோ எடையை கூட தூக்கிக்கொண்டு ஓடும். சிங்கங்கள் தனியாகவே இரை தேடும். பெரும்பாலான சிங்கங்கள்  22 கி.மீ. சுற்றளவிற்குள்ளே தங்கள் குடும்பத்துடன் வசிக்கும். சில சிங்கங்கள் நாடோடிபோல திரியும்.

பொதுவாக   மணிக்கு  4 கி.மீ. தூரம் நடக்கும்.  சிங்கங்கள் ஓட ஆரம்பித்தால் மணிக்கு 56 கி.மீ. வேகத்தில் ஓடும். இரையை தேட வேட்டைக்கு செல்லும்போது அது
7 முறை முயன்றால் அதில் ஒரு முறை மட்டுமே வெல்லுமாம்.

இதன் கர்ஜிக்கும் ஓசையின் அளவு எவ்வளவு தெரியுமா? 114 டெசிபல்கள்,  இதன் கர்ஜனை காட்டில் 8 கி.மீ.க்கு அப்பால்கூட கேட்குமாம். பொதுவாக பெண் சிங்கங்கள்தான் இரையை தேட வேட்டைக்குச் செல்லும். ஆனால், கொண்டுவரும் இரையை முதலில் ருசி பார்த்து சொல்வது ஆண் சிங்கங்கள்தான். அதன் பிறகுதான் பெண் சிங்கங்கள் சாப்பிடும் கடைசியாக குட்டிகள் இரையை சாப்பிடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் சிங்கங்கள் வேட்டைக்கு செல்லும்.

 

கடலின் ராஜா கில்லர் சுறாக்கள்:

து கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கூட தென்படுகிறது. 30 அடி நீளமும் 4500 கிலோ எடை வரை கூட வளரும். இது கூட்டமாக சேர்ந்து இரை தேடும். சில சமயங்களில் 50 கூட சேர்ந்து இரை தேடும். கடலின் கரையோர அடித்தளத்தில் வாழ விரும்பும் இவைகள் எப்போதாவதுதான் ஆழ்கடலுக்குள் செல்லும். தொடர்ந்து நீந்தும் ஆற்றலுடையது.

கில்லர் சுறாக்கள் விரும்பி சாப்பிடுவது மீன்கள் மற்றும் சீல்கள்.  மனிதர்களை தாக்க அதற்கு தெரியாது. பெரும்பாலும் சுறாக்கள் அதன் அருகில் மனிதர்கள் செல்லும்போது தன்னை தற்காத்துகொள்ளவே மனிதர்களை மிரட்டுகின்றன. கில்லர் சுறாக்கள் பொதுவாக நோய்வாய்ப்படுவதில்லை. அந்தளவுக்கு அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

கில்லர் சுறாக்களுக்கு கேட்கும் ஆற்றலும், நுகரும் ஆற்றலும் அதிகம். இரண்டு கி.மீ. தொலைவில் எழும் சப்தத்தைக்கூட தெளிவாக கேட்கும். கடலில் படும் ஒரு துளி இரத்த வாடையை கூட முகர்ந்து பார்க்கும் ஆற்றல் கொண்டது.

வானில் ராஜா என்று வழுக்கை தலை கழுகுகள்:

வை 20 முதல் 25 ஆண்டுகளுக்கு வாழும். வானில் பறக்கும்போது இரண்டு மைல் தொலைவில் உள்ள இரையை கூட இந்த கழுகு கண்களால் காண முடியும். ஒரு இரையை கண்டு குறி வைத்துவிட்டால் வேறு எதிலும் கவனம் செலுத்தாது. இரையை எடுத்து விட்டுதான் வேறு எதிலும் கவனம் செலுத்தும். இவைகள் எப்பொழுதும் புதிய உணவுகளை மட்டுமே உண்ணும்.

கழுகுகள் மற்ற கழுகுகளுடன் மட்டுமே பறக்கும். காரணம் மற்ற பறவைகள் அந்த உயரத்தில் பறக்க முடியாது. இந்த வகை கழுகுகள் புயல்களை சந்திக்கும் ஆற்றல் உடையவை. இரையை தேடும்போது தன் எடையை போன்று 8 மடங்கு அதிக எடையை தூக்கும் திறன் இதற்கு உள்ளது. வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் மட்டுமே வாழும். தங்களின் கூடுகளை மிக உயரமான இடங்களில் மட்டுமே கட்டும்.

வானில் ராஜாவாகவே வழுக்கை தலை கழுகுகள் இருந்தபோதிலும், அமெரிக்காவில் வசிக்கும் தலையில் சிகப்பு நிற கொண்டையுடன்  கூடிய ஒரு சிறிய பறவை உள்ளது. 20 செ.மீ. நீளமுள்ள இந்த குட்டி பறவை தன் விரோதிகளிடமிருந்து தப்பிக்க கழுகுகளை விட உயரத்தில் பறக்குமாம். இதை சிறிய கிழக்கு பகுதி கிவி பறவை என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com