கோலங்கள் - சில தகவல்கள்!

கோலங்கள் - சில தகவல்கள்!
Published on

கோலம் என்றால் அழகு என்று பொருள். கை விரலால் மணலில் மங்கையர் வரைவதை கூடலிழைத்தல் என்பர்.

பெண்கள் காலையில் சூரிய உதயத்திற்கு முன் வாசல் தெளித்து கோலம் இட வேண்டும். கிராமங்களில் பசுஞ்சாணம் தெளித்து கோலமிடுவர். இது கிருமி தொற்று களிலிருந்து காக்கும் இயற்கை வழியாக இருக்கிறது.

காலையில் நான்கு கோடுகளும் , மாலையில் இரண்டு கோடுகள் வைத்து கோலமிட வேண்டும்.

மார்கழி மாத காலைக் காற்றில் ஓசோன் நிறைந்திருக்கும் என்பதால் அந்த நேரத்தில் கோலமிடுவதால் நுரையீரலுக்கு தேவையான சுத்த காற்றை சுவாசிக்க ஏதுவாகிறது.

பெண்கள் குனிந்து கோலமிடுவதால் முதுகு, இடுப்பு பகுதிகளை வலுவாக்கி சிறந்த உடல் பயிற்சியாக உறுதிக்கு வழிவகுக்கிறது.

உட்கார்ந்து கோலமிடக் கூடாது. செல்வம் போய்விடும் என்பர். இதயக்கமலம், சங்கு சக்கரக் கோலங்கள் பூஜையறையில் கன்னிப் பெண்கள் போட நல்ல கணவன் கிடைத்து மணவாழ்க்கை சிறக்குமென்பர்.

புள்ளி அதிகம் வைத்து போட கவன குவிப்புத் திறன் அதிகமாவதோடு புண்ணியம் கிடைக்கும் என்பர்.

தண்ணீர், கரியால் கோலமிடக் கூடாது. விளக்கு வைத்த பின் கோலமிடகூடாது.

இருட்டு நேரத்தில் துர்தேவதைகள் நடமாட்டம் இருக்குமென்றும் கோலமிட்டு வைத்தால் அக்கோலத்தை தாண்டி அவை வராது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

கிராமங்களில் வில், வாள் போன்றவற்றை வரைவர்.

கோலமிடுவதால் கை விரலுக்கு பயிற்சி , கற்பனைத்திறன் மேம்படுகிறது.

மூளை செயல்திறனை அதிகரிக்கிறது. இது போல பல நன்மைகள் தரும் கோலத்தை அழகுப்படுத்த வன்ணக் கோலமிடலாம்.

கலர் கோலமாவை ஆற்று மணலுடன் சலித்து கலந்து போட, கலர் கொடுக்க சுலபமாக இருப்பதுடன் அழியாமல், காற்றில் பறக்காமல் இருக்கும்.

பூசணிப்பூ இல்லாத போது அந்தந்த கிழமைக்கேற்ற கலர் பூக்கள் சாமந்தி ரோஜா என வைக்க அழகாக இருக்கும்.

கோலமிடத் தெரியாதவர்கள் கூட ஸ்டென்சில்,கோல அச்சு வைத்து கோலமிட்டு கலர் கொடுக்க சூப்பராக இருக்கும்.

அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் கோலமிட முடியவில்லை என நினைக்காமல் சின்ன கோலத்திலேயே ரங்கோலி, சிக்கு, பூக்கோலம் என வெரைட்டி காட்டலாம்.

வண்ணக் கோலம் போட்டு பார்டர் கொடுத்து விட்டு ஓரத்திலோ, நடுவிலோ அதன் மினியேச்சராக சின்ன கோலமிட அழகாக இருக்கும்.

கோலம் என்னும் நம் பாரம்பரிய பழக்கத்தை விடாமல் பெண்கள் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com