கோல்டன் குளோப் விருது: முதன்முறையாக கொரியா நடிகர் பெற்று சாதனை!

கோல்டன் குளோப் விருது:  முதன்முறையாக கொரியா நடிகர் பெற்று சாதனை!

உலகம் முழுவதும் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் கோல்டன் குளோப் விருதில் சிறந்த துணை நடிகருக்கான விருதை கொரியா நாட்டு நடிகர் ஓ யோங்சு பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்குவிட் கேம் என்கிற வெப்சீரீஸில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

.கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஸ்குவிட் கேம்' சீரீஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகி, உலகம் முழுவதும் பெறும் வரவேற்பைப் பெற்றது. இதில் Player 001 என்ற மிக முக்கியமான துணை கதாபாத்திரத்தில் 77 வயதான நடிகர் யோங்சு நடித்திருந்தார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் பலரின் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றார்.

இவரின் இந்த திறமையை அங்கீகரிக்கும் வகையில் தற்போது கோல்டன் குளோப் 2022-வின் சிறந்த துணை நடிகருக்குகான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெறூம் முதல் கொரியன் நடிகர் இவர் என்ற பெருமையும் யோங்சு பெற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com