கோதுமை ரவை உப்புமா

கோதுமை ரவை உப்புமா

உஷா முத்துராமன், மதுரை.

தேவை:
கோதுமை ரவை ஒரு கப்
வெங்காயம் -1
தேவையான காய்கறிகள்உருளைக்கிழங்கு பீன்ஸ் பட்டாணி கேரட்
பச்சை மிளகாய் 2.
உப்பு, பெருங்காயம்தேவையான அளவு
எண்ணெய் தாளிக்க

செய்முறை:
எண்ணெய் இல்லாமல் வாணலியில் சிறிது நேரம் கோதுமை ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும் .குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு தேவையான வடிவில் நறுக்கிய காய்கறிகள் ( உருளைக்கிழங்கு பீன்ஸ் பட்டாணி கேரட்) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் . பிறகு வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை போடவும். அத்துடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி 1 அல்லது 2 சத்தம் வரும்படி வைக்கவும். குக்கரில் பிரஷர் இறங்கியவுடன் அவற்றைத் திறந்து விட்டு பிறகு எடுத்துப் பார்த்தால் உதிரியான கோதுமை ரவா உப்புமா" தயாராக இருக்கும்.மிகவும் சுவையாக இருக்கும் .தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com