
–ராகவ் குமார்.
தமிழ்த் திரையுலகில் நடிகர் மோகனை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட அவர்தான் 80-களின் வெள்ளி விழா நாயகன்! அதிலும் சூப்பர் ஸ்டார் ஜினி, மற்றும் கமல் படங்களுக்கு இணையாக மோகனின் படங்கள் வசூலில் சாதனை செய்தது. இன்றும் இவர் திரையில் வாயசைத்து பாடிய பாடல்கள் பிரபலம்!. வெளியூர் பேருந்து, கார் பயணங்களிலும் பண்பலைகளிலுமஙிவரது படப் பாடல்களே ஆக்கிரமித்து இருக்கின்றன.சில காரணங்களால் நடிக்காமல் இருந்த மோகன் தற்போது மீண்டும் 'ஹாரா' என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை விஜயஸ்ரீ இயக்குகிறார். பள்ளி மாணவர்களுக்கு இந்திய சட்ட நுணுக்கங்களை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒன் லைன் படத்தில் இருக்குமாம் நல்ல கதையில்தான் நடிப்பேன் என்று உறுதி யாக இருந்த மோகனுக்கு இந்த படம் சரியான தீனியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நாம் சாக்லேட் பாய் கதாநாயகனாக மட்டுமே பார்த்து வந்த மோகன், இந்த புதிய படத்தின் போஸ்டரில் டெரர் லுக்கில் தாடியுடன் கலக்கலாக இருக்கிறார். பொதுவாக மோகனுக்கு அவர் படங்களில் பாடகர் சுரேந்தர் குரல் தந்திருப்பார். இப்போது 'ஹாரா'விற்கு யார் டப்பிங் வாய்ஸ் தரபோகிறார்கள் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. எனி வே வெல்கம் மோகன் சார்.