ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!
Published on

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூரின் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு நேற்று காலையில் முப்படை தளபபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். அப்போது குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நச்சப்புராசத்திரம் என்ற இடத்தினருகே ஹெலிகாப்டர் விப்பத்துக்குள்ளானதில் ராணுவ தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்ற துணை விமானை வருண் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக்குழுவும், வெலிங்டன் ராணுவ மையக்குழுவும் இணைந்து ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும் பணியை மேற்கொண்டு, இன்று கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது.

இதுகுறித்து ராணூவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டரிலிருந்து மீட்டு எடுக்கப்பட்ட இந்த கருப்புப்பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லி கொண்டு சென்று ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் பதிவான விஷயங்களை விபத்துக்கான காரணத்தை அறிய முடியும். விபத்துக்கு முன்னதாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவான இந்த கருப்புப்பெட்டியை ஆய்வுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் விமானப் படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் CRASH DATA RECORDER எனப்படும் குரல் பதிவு கருவியை கண்டறிந்து, அதில் பதிவான பேச்சுகளை ஆராய்ந்தால் மட்டுமே முழு தகவல் தெரிய வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com