இமயமலையில் பெட்ரோலைவிட தண்ணீர் விலை அதிகம்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இமயமலையில் பெட்ரோலைவிட தண்ணீர் விலை அதிகம்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்
, மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தெலி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அரசுக்கு நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பெட்ரோல் விலை உயர்வு முக்கிய அங்கம் வகிக்கிறது. இமயமலையில் தண்ணீர் பாட்டிலின் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது. மேலும், பெட்ரோல் விலையை உயர்த்தியதால்தான் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிந்தது.

இவ்வாறு அமைச்சர் பேசினார். அவரது இந்த சர்ச்சை பேச்சு நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com