ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்து!

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்து!

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் 'டெர்மினேட்டர்' படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர். கட்டுமஸ்தான உலக சாதனை படைத்தவர். இவர் தமிழகத்தில்

இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவான படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்திருந்தார் அர்னால்ட்.

நேற்று அமெரிக்காவின் ப்ரன்ட்வுட் பகுதியில் அர்னால்டு சென்ற கார் விபத்துக்குள்ளாகி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது அர்னால்டின் கார் மோதி விபத்து ஏற்பட்டதாக அமெரிக்க போலீஸ் தெரிவித்துள்ளது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இருந்தவருக்கு பலத்த காயமும், அர்னால்டுக்கு லேசான காயமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தெரிவித்த அமெரிக்க் காவல்துறை, அர்னால்டு மீதுதான் தவறு உள்ளது என்றும் காரை அவர் இடது பக்கம் திருப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னராக இருந்த அர்னால்ட் நடிப்பில் கடைசியாக 2019-ம் ஆண்டு டெர்மினேட்டர் டார்க்பேட் என்ற திரைப்படம் வெளியானது. மேலும் குங் ப்யூரி 2 என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com