ஓட்டல் பில் கட்டாததால் தகராறு: பிரபல நடிகரின் மகன் வெளியேற அனுமதி மறுப்பு!

ஓட்டல் பில் கட்டாததால் தகராறு: பிரபல நடிகரின் மகன் வெளியேற அனுமதி மறுப்பு!

Published on

தமிழ் சீரிய்யல் படப்பிடிப்புக்காக மூணாறு ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஓட்டல் பில் கட்டாததால் பிரபல நடிகரின் மகன் உட்பட படக்குழுவை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படக்குழுவினர் தொடர்பாக வெளீயான தகவல்:

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் புதிய தொடர் ஒன்றில் நடிப்பதற்காக படக்குழுவினருடன் மூணாறு சென்று, அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அந்த படக்குழுவினர் ஹோட்டல் அறை மற்றும் ரெஸ்டாரண்ட்டுக்கான தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் அவர்களை சிறை வைத்தனர். அதன்பிறகு போலீசார் வந்து விசாரணை நடத்தி பிரச்சினையை முடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com