0,00 INR

No products in the cart.

​இடது கண் ஏன் அழுதது?

றைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம் மயூரசர்மன் எனும் பக்தனிடம் கேட்ட தானமும், அதற்கு அந்த பக்தனின் நிலைப்பாட்டையும் தனது, ‘வில்லிபாரதம்’ சொற்பொழிவில் அழகாக விளக்கினார் நாகை முகுந்தன்.

‘‘யூரசர்மன் என்பவன் ஸ்ரீகிருஷ்ணரிடம் பரம பக்தி கொண்டிருந்தான். ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணர் அவனைப் பார்க்க வந்து சேர்ந்தார்.
மயூரசர்மா! நான் ஒன்று கேட்பேன். கொடுப்பாயா?’ என்று கேட்டார்.
நீங்கள் என்ன கேட்டாலும் கொடுப்பேன்’ என்றான் அவன்!
உனது ஐந்து வயது மகன் எனக்கு வேண்டும். கொடுப்பாயா?’
தருகிறேன்!’
அவன் முழுதாக எனக்குத் தேவையில்லை. அவனது வலது பாகம் மட்டும் போதும்!’
மனப்பூர்வமாகத் தருகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்!’
சிறுவனை நிற்க வைத்து அவன் தலையில் ஒரு ரம்பத்தை வைத்து நீ ஒரு பக்கமும், உனது மனைவி ஒரு பக்கமும் பிடித்துக் கொண்டு அரிந்து தர வேண்டும்!’
உங்கள் விருப்பப்படியே குறை இல்லாமல் செய்கிறோம்!’
அவனை சரிபாதியாக நறுக்கி, வலது பாகத்தை மட்டும் எனக்குக் கொடுக்க வேண்டும்!’
அப்படியே செய்கிறோம்!’
அப்பொழுது நீயும் அழக்கூடாது. உன் மனைவியும் அழக் கூடாது!’
அழ மாட்டோம்!’
உன் மகனும் அழக்கூடாது!’
ஒப்புக் கொள்கிறோம்!’
இந்த நிபந்தனையின் பேரில்தான் நான் உனது மகனின் வலது பாகத்தை ஏற்றுக் கொள்வேன். இல்லையெனில் மாட்டேன்!’
உங்கள் நிபந்தனைகளின்படியே நடக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் தங்கள் மகனைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அவனை நிற்க வைத்து நறுக்க ஆரம்பித்தார்கள். பெற்றோரின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. ஆனால், சிறுவனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன், ‘என் நிபந்தனைகளின்படி நீங்கள் நடக்கவில்லை. அதனால் உனது சிறுவன் எனக்கு வேண்டாம்’ என்றார்!
நாங்கள் இருவரும் அழவே இல்லையே?’ என்றான் மயூரசர்மன்!
ஆனால், உனது மகனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறதே!’

அதைக்கேட்ட அந்தச் சிறுவன், ‘ஸ்வாமி, என் உடலின் வலது பாகம் பண்ணிய புண்ணியத்தை, இடது பாகம் பண்ணவில்லையே என்றுதான் எனது இடது கண் அழுகிறது’ என்றான்!

அதைக்கேட்ட ஸ்ரீகிருஷ்ணர், அந்தச் சிறுவனை கட்டித் தழுவிக்கொள்ள, அவன் முன் போல் ஆனான்” என்று, நாகை முகுந்தன் சொற்பொழிவாற்றியபோது, அந்த அரங்கமே ஆனந்தக் கண்ணீரில் மிதந்தது!

ஆதினமிளகி, வீரசிகாமணி

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...

சாம்பிராணி தூபக் கடாட்சம்!

- ஏ.எஸ்.கோவிந்தராஜன் சாம்பிராணி புகை போடுவது என்பது, வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாகக் கருதப்படுகிறது. சாம்பிராணி புகையானது, ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும். அதனால்தான் நமது முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும்...