இல்லம் தேடி கல்வி திட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

இல்லம் தேடி கல்வி திட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக வீட்டின் அருகில் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அந்த மணவர்களின் இருப்பிடங்களுக்கே ஆசிரியர்கள் நேரில் சென்று கற்பிக்கும் இந்த 'இல்லம் தேடி கல்வி திட்டம்' குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

logo
Kalki Online
kalkionline.com