இந்து மதத்துக்கு மாறிய இஸ்லாமியத் தலைவர்: உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு!

இந்து மதத்துக்கு மாறிய இஸ்லாமியத் தலைவர்: உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு!
Published on

உத்தர பிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசீம் ரிஸ்வி இந்து மதத்துக்கு மாறியதாகவும் தான் இறந்த பிறகு தன் உடலை இந்து முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது அங்கு பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து வாசீம் ரிஸ்வி தான் பேசி வெளியிட்ட வீடியோவில் தெரிவித்ததாவது:

நான் இஸ்லாம் மதத்திலிருந்து விலகி காஜியாபாத்தில் உள்ள தாஸ்னா கோவிலில் இந்துமத துறவியான நரசிம்ம ஆனந்த சரஸ்வதி என்பவரால் இந்து மதத்துக்கு மாறியுள்ளேன். எனக்கு வாசீம் ரிஸ்வி என்ற பெயருக்குப் பதிலாக ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என புதிய பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது மரணத்துக்கு பிறகு எனது உடலை புதைக்க கூடாது. இந்து முறைப்படி தகனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வாசீம் ரிஸ்வி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது இந்த முடிவு அங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com